சனிக்கோளின்
வெளிப்புறத்தில் மிகப்பெரிய வளையம் இருப்பதை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர், இதுவே முன் எப்போதும் கண்டிராத நமது சூரிய
குடும்பத்தில் உள்ள கோள்களின் மிகப்பெரிய வளையம் ஆகும்.
விஞ்ஞானிகள், இது
விண்வெளியில் உள்ள சனிக் கோளிலிருந்து 10 மில்லியன் மைல் (16 மில்லியன்
கிலோமீட்டர்கள் தொலைவில்), அதாவது 30% பெரிதாக இருக்கிறது என்ற உண்மை
தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வளையம், ஒரு மனிதனின் தலைமுடியின் அகலத்தை
விட சிறியதாக சிறிய துகள்களின் அளவாக உள்ளது. இதை ஆராய்ந்து பார்ப்பதற்கு
கடுமையாகவும், நம்பமுடியாதாகவும் இருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
Phoebe என்று அழைக்கப்படும் இந்த சனிக்கோளின் வெளிப்புற வளையம், முதன்
முதலாக ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்தி 2009ம் ஆண்டு
கண்டுபிடிக்கப்பட்டது. இது கண்டுபிடிக்கப்பட்டபோது, அதன் பண்புகள் பல
அறியப்படாமல் இருந்தன. ஆனால் தற்போது, உலகளாவிய-துறையில் இன்ஃப்ராரெட்
சர்வே எக்ஸ்ப்ளோரர் (வைஸ்) டெலஸ்கோப் பயன்படுத்தி வளையத்தின் அளவு, வடிவம்
மற்றும் அதன் தோற்றம் ஆகிய இன்ஃப்ராரெட் திறன்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
செய்து பார்க்கின்றனர். சனிக்கோளிலிருந்து இந்த வளையத்தின் தொலைவை அளவிட்டு
பார்த்தால், அது சனிக்கோளின் ஆரத்தை விட 270 மடங்கு பெரியதாகும். இது
தற்போது வரை கண்காணிக்க முடியாத அளவிற்கு கடினமாக உள்ளது, ஏனெனில் இதில்
பெரும்பாலும் மூன் Phoebeஇல் இருந்து வெளியேற்றப்படும் பொருட்களால்
உருவாக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...