மதுரையில்
நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களைமதிப்பீடு செய்வதற்கு
முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில் தேர்வுக் குழு
அமைக்கப்பட்டுள்ளது.இவ்விருது பெற தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பித்து
வருகின்றனர்.
நாளை (ஜூலை 15) கடைசி நாள்.
மாவட்டத்தில் மூன்று கல்வி மாவட்டங்களில் இருந்தும் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலிக்கவும், அவற்றின் உண்மை தன்மை மற்றும் மதிப்பீடு செய்வதற்காக, சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி தலைமையில் மூன்று மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் ஆய்வாளர், தொடக்கக் கல்வி அலுவலர், மூத்த தலைமையாசிரியர் குழுவை கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நியமித்துள்ளார்.
சி.இ.ஓ., கூறுகையில், "இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம், பணியின்போது ஒழுங்கு நடவடிக்கை இல்லாமை, கல்வியுடன் சமூகப் பணியில் ஈடுபாடு உட்பட தகுதிபெற்றிருக்க வேண்டும். ஜூலை 15 முதல் 20 வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். பின், நேர்காணல் நடத்தி ஆசிரியர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். இறுதியில் தொடக்க, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் ஆசிரியர்கள்என 18 பேரை தேர்வு செய்து இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...