`மழலை வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும்,
குழந்தைகளை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. `தமிழ்நாட்டில் பிரிகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி.ஆகிய
வகுப்புகள் படிக்கக்கூடிய குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும் என்றும் அவர்கள்
இருக்கும் வகுப்பறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும்
பள்ளிக்கல்வித்துறை புதிய விதிமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு இணையதளத்தில்
வெளியிட்டுள்ளது.
* பிரிகே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் பெட்ரோல் பங்குகளில் இருந்து 300 அடி தள்ளி அமைத்தல்.
* வகுப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
*பள்ளி வளாகத்தில் யாரும் புகை பிடிக்கக்கூடாது என்றும் மது விலக்கு பெற்ற
இடம் என்றும் பள்ளியின் முன் பலகையில் எழுதி இருக்க வேண்டும்.
* எந்த காரணத்தை கொண்டும் குழந்தைகளை ஆசிரியர்கள் உள்ளிட்ட யாரும்
பள்ளிக்கூடத்தில் அடிக்கக்கூடாது. அவ்வாறு அடித்தால் பள்ளி நிர்வாகம் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* வகுப்புகள் நிரந்தர கான்கிரீட் கூரையாக இருக்கவேண்டும். வகுப்பறைகள்
காற்றோட்டமாக இருக்கவேண்டும். கூடிய மட்டும் காம்பவுண்ட் சுவர் கட்டுதல்.
* தீ அணைப்பு கருவிகள், முதல் உதவி கருவிகள் தயாராக இருக்க வேண்டும்.
* குழந்தைகளை அழைத்துச் செல்லும் பஸ்கள், வேன்களில் மஞ்சள் நிற வர்ணம்
பூசவேண்டும். அவசர போன் நம்பர் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில்
வாகனங்களில் எழுதுவது.
* பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
* நடனத்துடன் பாட்டு பாட வைக்க வேண்டும்.
* விளையாட்டு முறையில்தான் கல்வி கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...