இது தொடர்பாக
ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரயில்கள் ரத்து செய்யப்பட்டால் கணினி
(இ.டிக்கெட்) மூலம் முன்பதிவு செய்தோருக்கு முழு கட்டணமும் தாமாகவே
திரும்பத் தரப்படும். இனி, இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண் டிய அவசியம்
இல்லை.
மேலும், காத்திருப்போர் பட்டி யலில் இருக்கும் பயணிகளுக் கும் பணம் திருப்பி தரப்படும். இந்த வசதி விரைவில் அமல் படுத்தப்படவுள்ளது.
இப்போது உள்ள
நடைமுறைப் படி, ரயில்கள் ரத்து செய்யப் பட்டால் இ.டிக்கெட் மூலம் முன்பதிவு
செய்தவர்கள் பயண சீட்டு ரத்து படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த புதிய வசதி அமலுக்கு வந்த பின் இ.டிக்கெட் மூலம் முன்பதிவு செய்த
பயணிகள் கட்டணத்தை திருப்பி தர தனியாக விண்ணப்பிக்க வேண்டிய தேவை
இருக்காது’’ என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...