காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விதேர்வு முடிவுகள்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பி.ஏ., ஆங்கிலம், பொது நிர்வாகம்,
பி.லிட்., தமிழ், பி.எஸ்சி., கணிதம் ஆகியவற்றிற் கும்,
எம்.பி.ஏ-யில் பேங்கிங் அன்ட் பைனான்ஸ், சிஸ்டம் மேனேஜ்மென்ட், பைனான்
ஷியல் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், புரடெக்ஷன் அன்ட்
ஆபரேஷன் மேனேஜ்மென்ட், கார்ப்பரேட் செகரட்டரிஷிப், கார்ப்பரேட்
மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் பிசினஸ், எம்.காம்., எம்.ஏ. ஆங்கிலம், தமிழ்,
வரலாறு, சோஷியாலஜி, எம்.எஸ்சி. கணிதம், கம்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ
மற்றும் எம்.சி.ஏ. நேரடி இரண்டாமாண்டு, எம்.சி.ஏ (செமஸ்டர் அன்ட்
நான்செமஸ்ட்டர்) ஆகியவற்றுக்கும், பி.ஜி. டிப்ளமோவில் பி.ஜி.டி. ஹாஸ்பிடல்
அன்டமினிஸ்ட்ரேஷன், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், யோகா எஜூகேஷன்
ஆகியவற்றிற்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இம்முடிவு வெளியான 10
தினங்களுக்குள் (ஜூலை 30) மறுமதிப்பீட்டுக்கு விண்ணப் பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பம் பல்கலைக் கழக இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மறுமதிப்பீட்டுக் கட்டணமாக பாடம்
ஒன்றுக்கு ரூ.500 வீதம் பதிவாளர், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி என்ற
பெயரில் வரைவோலை எடுத்து தேர்வுப் பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு
தேர்வாணையர் கா.உதயசூரியன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...