சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கவுன்சிலிங் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
பொறியியல்
படிப்புகளில் சேருவதற்கு மாணவ–மாணவிகளிடம் ஆர்வம் குறைந்து வரும் நிலையில்
மொத்தம் உள்ள 2 லட்சத்து ஆயிரத்து 861 இடங்களில் நேற்று வரை 89,141 பேர்
இடங்களை தேர்வு செய்து ஒதுக்கீட்டு கடிதங்களை பெற்றுள்ளனர். 38,168 பேர்
கலந்தாய்வில் பங்கேற்காமல் வேறு படிப்புக்கு சென்று விட்டனர்.
கலந்தாய்வு
தொடங்கியது முதல் ஆப்சென்ட் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இன்றும் நாளையும் நடக்கும் கலந்தாய்வில் சுமார் 7 ஆயிரம் இடங்கள்
நிரம்பினாலும் மொத்தம் 96 ஆயிரம் இடங்கள் நிரம்பும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 29,
30–ந் தேதிகளில் தொழில் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. ஆகஸ்டு
1–ந் தேதி பிளஸ்–2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு
நடக்கிறது. இதனையும் சேர்த்து ஒரு லட்சத்திற்கு குறைவான அளவில் இடங்கள்
நிரம்ப வாய்ப்பு உள்ளது.
எனவே வழக்கம்போல
இந்த வருடமும் பொறியியல் படிப்பில் காலி இடங்கள் ஒரு லட்சத்தை தாண்டும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 சதவீத இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
கடந்த ஆண்டை போலவே இந்த வருடமும் காலி இடங்களின் எண்ணிக்கை ஒரே அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40
ஆயிரமாக இருந்தது. ஆனால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2 லட்சத்து 1861
இருக்கும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பே 60 ஆயிரம் இடங்கள் காலியாக
இருப்பது உறுதியாகிவிட்டது.
மேலும்
கலந்தாய்விற்கு வராதவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து விட்டதால்
பொறியியல் படிப்பு காலி இடங்கள் ஒரு லட்சத்தை தாண்டுகிறது.
தனியார்
பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், பாடப்பிரிவுகள் எண்ணிக்கையும்
அதிகரித்து வரும் அளவுக்கு மாணவர்கள் சேர்க்கை கூடியதே இதற்கு காரணம். அவை
ஒரே சீரான அளவில் உள்ளது.
2010–ம் ஆண்டில்
472 பொறியியல் கல்லூரிகள் இருந்தது இவற்றின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம்
இடங்கள் கிடைத்தன. இதே போல 2011–ம் ஆண்டில் 502 கல்லூரிகளாக அதிகரித்து
ஒரு லட்சத்து 54 ஆயிரம் இடங்களாக உயர்ந்தது.
இந்த எண்ணிக்கை 2013–ம் ஆண்டு 539 கல்லூரிகளாக மேலும் உயர்ந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 5 ஆயிரம் இடங்கள் இருந்தன.
கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம், 60 ஆயிரம் என இருந்த காலி இடங்கள் தற்போது ஒரு லட்சத்தை தாண்டுகிறது.
அதே வேளையில்
கடந்த சில வருடமாக மெக்கானிக்கல் பாடப்பிரிவே முதல் இடத்தில் இருந்து
வருகிறது. இந்த ஆண்டும் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் அதிகளவில் மாணவர்கள்
சேர்ந்துள்ளனர். இ.சி.இ. பாடப்பிரிவு 2–வது இடத்தில் உள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகள் அடுத்தடுத்து உள்ளன.
பல தனியார்
கல்லூரிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 25–க்கும் மேற்பட்ட
பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. தரமான, சிறந்த
கட்டமைப்பு வசதிகள் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்ட கல்லூரிகளை மட்டுமே
மாணவர்கள் தேர்வு செய்து சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...