பல்லாயிரக்கணக்கான
இளைஞர்கள் ஏன் அப்துல் கலாமை முன்னுதாரணமாக, தங்கள் வாழ்க்கையின் ஒளி
விளக்காக கருதினார்கள்? என்பதற்கு மற்றொரு காரணம், தோல்வி, முடிவு, இல்லை
போன்ற வார்த்தைகளை கூட ஏற்றுக்கொள்ளாமல் அவற்றுக்கு புதிய விளக்கம் அளித்த
அவரது இயல்புதான் என்று கூறலாம்.
FAIL என்ற வார்த்தைக்கு (first Attempt In Learning) கற்றுக்கொள்வதற்கான முதல் வாய்ப்பு என்றும் END என்பதற்கு (Effort Never Dies) முயற்சி ஒரு போதும் தோற்பது இல்லை என்றும், NO என்பதை (Next Opportunity) அடுத்த வாய்ப்பு என்று வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விளக்கங்களை கொடுத்த கலாமை எப்படி இளைஞர்களுக்கு பிடிக்காமல் போகும்?
ஒரு மிகச் சிறந்த மனிதர் ஒருபோதும் இறப்பது இல்லை, மாறாக அவர் வாழ்வு மற்றவர்களுக்கு கலங்கரை விளக்கமாக மாறிவிடும். அவர்களது வாழ்வு, கடினமான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு வழிக்காட்டும் ஒளியாகிவிடும்.
அந்த வகையில் மீனவரின் மகனாக பிறந்து அரசு பள்ளியில் படித்து, நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து, நாட்டின் முதல் குடிமகனாக உருவெடுத்த அப்துல் கலாமின் வாழ்வும் ஒரு கலங்கரை விளக்கம் தான்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...