புதுச்சேரி: பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு கல்வித் உதவி தொகை வழங்கப்படும் என, அறிவித்துள்ளதால் இந்த ஆண்டு
மாணவர்களிடையே கடும் போட்டியோடு, பலத்த எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
நர்சிங் எதிர்பார்ப்பு
மருத்துவ கனவு தகர்ந்த மாணவர்களின் கவனம், துணை மருத்துவ படிப்பான
பி.எஸ்சி., நர்சிங் மீது இந்தாண்டு திரும்பியுள்ளது.கடந்த காலங்களில் சென்டாக்
கவுன்சிலிங்கில் நர்சிங் பிரிவிற்கு 300க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பெறப்படும்.
கூவி, கூவி அழைத்து கவுன்சிலிங் நடத்தினால் கூட 50 சதவீத இடங்கள் கூட
நிரம்பாது. தனியார் நர்சிங் கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கை இப்படித் தான் டல் அடிக்கும்.
இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, கவுன்சிலிங் துவங்கும் முன்
நர்சிங் படிப்பு மீது பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தங்களுடைய பிள்ளைகளுக்கு
இந்தாண்டு பி.எஸ்சி., நர்சிங் பிரிவில் இடம் கிடைக்குமா என தெரியாமல் பெற்றோர்கள் தவிப்பிற்குள்ளாகி
வருகின்றனர்.
சென்டாக் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இந்த கட் ஆப்
மதிப்பெண்ணிற்கு எந்த கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் கிடைக்கும் என,
நச்சரித்து
வருகின்றனர். குறைந்த மதிப்பெண் எடுத்த
மாணவியரின் பெற்றோர் 1.50 லட்சம் ரூபாய் வரை, கொடுத்து, பதிவு செய்துள்ளனர்.
இது போன்று கடும் போட்டியில் நர்சிங் கவுன்சிலிங்கில்
இதுவரை நடந்ததில்லை.கடந்தாண்டு தனியார் கல்லுாரிகளில் 320 பி.எஸ்சி., நர்சிங் இடங் கள் அரசு
ஒதுக்கீடாக பெறப்பட்டது. இந்தாண்டு 280 இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளது.
மூன்று நர்சிங் கல்லுாரிகள் சீட்டுகளை திடீரென குறைந்து
கொண்டதால் 40 இடங்கள் குறைந்துள்ளன. ஒட்டு மொத்தமாக அரசு,
தனியார் நர்சிங்
கல்லுாரிகளில் இந்தாண்டு 348 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இருப்பினும் இந்தாண்டு ஒரு சீட்டு கூட வீணாக
வாய்ப்பில்லை.
நிதியுதவி
எம்.பி.பி.எஸ்., பி.டெக்., படிப்புகளுக்கு மட்டுமே காமராஜர் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
முக்கியமான வேறு சில தொழில் கல்விகளுக்கு அமல்படுத்தவில்லை. பல ஆண்டு கோரிக்கைகளுக்கு பிறகு தற்போது பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு கல்வித்
உதவி தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நர்சிங் படிப்பிற்கு கடும் போட்டி ஏற்பட்டு, பலத்த எதிர்பார்ப்பினையும்
ஏற்படுத்தியுள்ளது.இதேபோல், புதுச்சேரி பொறியியல் படிப்பு முன்பு போல் இல்லை. வேலை வாய்ப்பும் மந்தமாக
உள்ளது. படிப்பு முடித்த பலருக்கு தகுந்த சம்பளம் கிடைக்கவில்லை. ரூ. 6 ஆயிரத்திற்கு கூட கம்பெனி
வரவேற்பு அறையில் வேலை பார்க்கின்றனர்.
நர்சிங் படிப்பும் அப்படி இல்லை. கடின சேவை பணி என்றாலும்
மருத்துவமனைகளில் சேர்ந்ததும் ரூ. 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் வரை கிடைக்கிறது. இதன் காரணமாகவும் நர்சிங் படிப்பின்
மீது மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது.
நர்சிங் முதலாம் ஆண்டு கட்டணம் - ரூபாய்
மதர்தெரசா (அரசு) 16,250
சபரி 25,000
மணக்குள விநாயகர் 25,000
இந்திராணி 25,000
ஈஸ்ட் கோஸ்ட் 28,000
ராக் 28,000
பிம்ஸ் 25,000
கஸ்துார்பா 75,000
பத்மாவதி 28,000
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...