தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியைச் சேர்ந்த ராஜரத்தினம், ஐகோர்ட்
மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தற்போது விவாகரத்து
வழக்குகளும், முதியோர் இல்லங்களும் அதிகரித்துள்ளன. கூட்டுக் குடும்ப முறை
சிதைந்து விட்டது. முதியோரிடம் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள்
அதிகரித்துள்ளன.
2011ல் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தாக
சிறுவர்கள் மீது 2,083 வழக்குகள் பதியப்பட்டுள் ளன. இதில், 1,170 பேர்
ஆரம்ப கல்வி பெறும் நிலையில் உள்ளவர்கள். இது போன்ற
நிலையை தடுக்க தற்போதுள்ள கல்வி முறையில் மாற்றம் தேவை.வாழ்வியல்
நெறிமுறைகளை திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். தமி ழக
பள்ளிகளில் தற்போது திருக்குறள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், பள்ளி
படிப்பை முடிக்கும் போது, சில அதிகாரங்களை மட்டுமே தெரிந்த நிலையில்
மாணவர்கள் உள்ளனர். 1,330 குறள்களும் முழுமையாக கற்பிக்கப்படுவதில்லை.
திருக்குறளை முழுமையாக கற்ற ஒரு மாணவனால், முழு மனிதனாக வாழ
முடியும்.திருக்குறளை இன்றைய மாணவர்கள் முழுமையாக கற்க வேண்டியது அவசியம்.
எனவே, 6ம்வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய
வேண்டும்.
1,330 குறள்களையும் தனி பாடமாக்க வேண்டும் என உள்துறை செயலாளர் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ``திருக்குறளை மாணவர்கள் நன்றாக கற்க வேண்டியது அவசியம். ஏனெனில் திருக்குறளில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை. அரசாட்சி, நிர்வாகம், பொருளாதாரம், இல்லறம் என அனைத்தையும் திருவள்ளுவர் தெளிவாக விளக்கியுள்ளார். இதை முழுமையாக கற்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
எனவே, இந்த வழக்கில் உள்துறை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டியதில்லை. பள்ளி கல்வித்துறை இயக்குநரை இந்த நீதி மன்றம் தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறது. அவரும், தமிழ் வளர்ச்சித் துறை செயலரும் மனுவிற்கு பதிலளிக்க வேண்டும்,’’ என உத்தர விட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...