சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகளப் போட்டியில், கோவையைச் சேர்ந்த மாணவரும், மாணவியும் சாதனை படைத்து நாடு திரும்பியுள்ளனர்.ஆசிய அளவிலான இரண்டாவது தடகளப் போட்டிகள் சீனாவில் கடந்த மாதம் நடைபெற்றன.
அதில், கோவையிலிருந்து சித்தாபுதூரில் உள்ள
மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவரான விவேகானந்தன்
என்பவரும், சி.ஆர்.ஆ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி என்பவரும்
பங்கேற்றனர்.இதில் விவேகானந்தன், உயரம் தாண்டுதல்
பிரிவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். 17 வயதுக்கு
உட்பட்டோருக்கான மும்முறை தாண்டுதலில், நந்தினி 3-வது இடம்
பிடித்தார்.இருவரும் விமானம் மூலம் நேற்று முன்தினம் கோவை திரும்பினர்.
மாணவர் விவேகானந்தனுக்கு கோவை பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம்,
விமானநிலைய ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். கோவை மாவட்ட
உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) அனந்தலட்சுமி வாழ்த்து தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...