எண்ம இந்தியா வாரத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.
அஞ்சல்துறையில் பிரதமர் மோடியால் எண்ம இந்தியா (டிஜிட்டல் இந்தியா)
திட்டம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதையொட்டி ஒரு வாரம் இந்த
விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும்
புதிய சேமிப்பு கணக்குகள் மற்றும் பிற கணக்குகள் தொடங்க சிறப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாக பள்ளி மாணவ, மாணவிகள் அஞ்சலகங்களை பார்வையிடும்
நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளைச்
சேர்ந்த மாணவ, மாணவிகள் கோட்ட தலைமை அஞ்சல் நிலையங்களில் உள்ள
செயல்பாடுகளை பார்வையிட்டனர்.
அனைத்து சேமிப்பு கணக்குகளிலும், காப்பீடு பாலிஸிகளிலும் வாடிக்கையாளர்
தங்கள் ஆதார் மற்றும் தொலைபேசி எண்களை இணைத்துக்கொள்ள சனிக்கிழமை சிறப்பு
வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மின்னணு வணிக நிறுவனங்கள் தங்களது
வணிகத்தை அஞ்சலகம் மூலம் மேம்படுத்த ஜூலை 6-ஆம் தேதி சிறப்பு வசதி
செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 7-ஆம் தேதி அஞ்சலக வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி
நடைபெறும். வாடிக்கையாளர்கள் தங்களது குறை, நிறைகளை இக்கூட்டத்தில்
தெரிவிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...