தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின்
கணக்கு இருப்பு மற்றும் பிற தகவல்களை, தமிழில், எஸ்.எம்.எஸ்., மூலம் பெறும்
வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பி.எப்., சந்தாதாரர்களுக்கு, ஒருங்கிணைந்த நிரந்தர அடையாள எண்
வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, 'ஆன் - லைன்' மூலம்,
பி.எப்., கணக்கு விவரங்கள் மற்றும் பிற வசதிகளை பெற முடியும்.
சந்தாதாரர்கள், EPFOHO UAN TAM என, குறிப்பிட்டு, 77382 99899 என்ற
எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அவர்களின் பி.எப்., கணக்கு பற்றிய
தகவல்கள், தமிழில், எஸ்.எம்.எஸ்., ஆக வரும். செயலற்ற கணக்குகளை முடிவுக்கு
கொண்டு வரவும், பழைய கணக்கில் உள்ள தொகையை, புதிய கணக்கிற்கு மாற்றவும்,
உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பணிக்கு செல்வோருக்கு,
மையப்படுத்திய உறுப்பினர் சான்று வழங்கப்படும்.
'ஆன் - லைன்' மூலம், சந்தாதாரர் கணக்குகளை மாற்றம் செய்ய
விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் கணக்குகள், 'ஆன் - லைனில்' பதிவேற்றம்
செய்யப்படுகிறது; 2014 - 15ல், 14.5 கோடி உறுப்பினர் கணக்குகள், பதிவேற்றம்
செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும்,
'ஆன் - லைன்' மூலம் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அதில்
கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...