அரசு தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆண்டுதோறும்
மே மாதத்தில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட
மாற்றங்களுக்கான கலந்தாய்வு நடக்கும். இதன் மூலம் பதவி உயர்வு, பணியிட
மாறுதல் பெற்று செல்லும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஜூன் கல்வி ஆண்டு
துவக்கத்தில் தேர்வு செய்த பள்ளிகளில் பணியில் சேர்வர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும். கல்வி ஆண்டு துவக்கம் முதல் கல்வி கற்பித்தல், அரசின் இலவச திட்டம் வழங்குதல் போன்ற பணிகள் நடக்கும். ஆனால், 2014ம் ஆண்டில் அரசு மே மாதம் நடத்த வேண்டிய கலந்தாய்வை ஜூலையில் காலதாமதமாக நடத்தினர். இதனால் பெரும்பாலான ஆசிரியர் பாதிக்கப்பட்டனர். தலைமை ஆசிரியர் இல்லை: தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவர். 2015ம் ஆண்டில் இதற்காக அரசு, மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தும் என எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜூலை வரை நடத்த முன்வரவில்லை.
இதனால், கல்வி ஆண்டு துவக்கத்திலேயே
நுாற்றுக்கணக்கான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஏராளமான பள்ளிகளுக்கு ஆசிரியர்களே நியமிக்காததால், பெரும்பாலான
மாவட்டங்களில் அரசு பள்ளிகள் ஓராசிரியரைக் கொண்டே இயங்குகின்றன. இதனால்,
மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகிறது.
மே மாதம் கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர்
பதவி உயர்வு கிடைத்திருந்தால் சம்பள உயர்வின் மூலம் மாதம் ரூ.1,500 வரை
கூடுதலாக கிடைத்திருக்கும். இந்த சம்பள உயர்வும் கிடைக்காமல் தலைமை
ஆசிரியர் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் புலம்புகின்றனர். பல
முறை தொடக்க கல்வி இயக்குனரிடம் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியும்,
கலந்தாய்வு நடத்த முன்வரவில்லை,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...