மதுரை: மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் கூட்டம், காரைக்குடி அழகப்பா
பல்கலையில் நடந்ததால் அதன் உறுப்பினர்கள், பேராசிரியர்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர்.இப்பல்கலைக்கு துணைவேந்தரை நியமிக்க தேர்வுக் குழு
நியமிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் இல்லாததால் அமைக்கப்பட்ட 'வழிநடத்தும்
குழு'வில் (கன்வீனர் கமிட்டி) இருந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் கண்ணன்,
பெரியகருப்பன் அண்மையில் ஓய்வு பெற்றனர். இதனால் 'வழி நடத்தும் குழு'வுக்கு
உடனடியாக புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக சென்னையில் ஜூன் 2ல் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், மதுரை
காமராஜ் பல்கலையில் இதற்கான கூட்டம் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்ய
முடிவு எடுக்கப்பட்டது. மாறிய கூட்டம்: இதற்கிடையே காரைக்குடி
அழகப்பா பல்கலை சிண்டிகேட் கூட்டம் நேற்று நடந்தது. அதில் உயர்கல்வி செயலர்
அபூர்வா பங்கேற்றார். மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் கூட்டத்தையும்
அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, முதல் நாள் இரவில் உறுப்பினர்களுக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிலருக்கு இத்தகவல் சென்றடையாததால் அவர்கள் பங்கேற்க முடியவில்லை.
அக்கூட்டத்தில், 'வழிநடத்தும் குழு' புதிய உறுப்பினர்களாக சிண்டிகேட்
உறுப்பினர்கள் வெங்கட்ராமன் (ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி முதல்வர்),
ராஜராஜன் (போடி சி.பி.ஏ., கல்லுாரி முதல்வர்) தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள், பேராசிரியர்கள்
கூறுகையில், 'ஒரு பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், இன்னொரு பல்கலையில்
நடப்பதை ஏற்க முடியாது. இப்பல்கலைக்கு என முக்கியத்துவம் உள்ளது. மதுரை
விமான நிலையத்திற்கு வந்து தான் செயலர் காரைக்குடிக்கு சென்றார். மதுரையில்
கூட்டம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் சென்னையில் நடத்தி இருக்கலாம்.
செயலரின் இம்முடிவு அதிருப்தி அளிக்கிறது' என்றனர்.
'ஒரு பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், இன்னொரு பல்கலையில் நடப்பதை ஏற்க முடியாது.
இப்பல்கலைக்கு என முக்கியத்துவம் உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...