காரைக்குடி மானகிரி
செட்டிநாடு பள்ளியில்,பிளஸ் 1 படிக்க இத்தாலி மாணவர்கள்
வந்துள்ளனர்.இத்தாலி நாட்டைச் சேர்ந்த, மாணவர்களான மார்ட்டின்,17,
லியானார்டோ,17 ஆகியோர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மானகிரி செட்டிநாடு
பள்ளியில், இந்த ஆண்டு பிளஸ் 1-வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
தமிழ்மொழியையும்
சேர்த்து கற்கும் இவர்கள், நேற்று, பள்ளியில் நடந்த வித்யாம்பரம்
நிகழ்ச்சியில், தமிழ் முதல் எழுத்தான, 'அ'-வை, அரிசியில் எழுதி தங்கள்
படிப்பை தொடர்ந்தனர்.ஓராண்டு படிக்க இருக்கும் இந்த மாணவர்கள், பிளஸ் 1-ல்,
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியில் பாடங்களுடன், ஆங்கிலம், தமிழ்
மொழி ஆகியவற்றையும் கற்கின்றனர்.
மாணவர்கள்
கூறியதாவது:நாங்கள், உயர்நிலை நான்காம் ஆண்டு படிப்பை, தமிழகத்தில் படிக்க
வந்துள்ளோம். ஐந்தாம் ஆண்டு படிப்பை, இத்தாலியில் தொடர்ந்து படிப்போம்.
அமெரிக்கன் பீல்டு சர்வீஸ் - ஏ.எப்.எஸ். மூலம், இங்கு
வந்துள்ளோம்.படிப்புடன் தமிழகத்தின் கலாசாரம், மொழி, பண்பாடு,
கட்டடக்கலையையும் படிக்க உள்ளோம். எதிர்காலத்தில், ஆராய்ச்சியாளராகவும்,
பேராசிரியராகவும் வருவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...