“ஒன்றே
குலம் ஒருவனே தேவன் -
திருமூலர்
“சாதிகள்
இல்லையடி பாப்பா” -
பாரதி
’வாழ்க்கை’ என்னும் காலக்கண்ணாடி
’சாதி’ என்ற கல்லடி பட்டு, ’சமூகம்’ எனும் பிம்பமாகி பல நூறு துண்டுகளாக சிதைந்து போகின்றது.
’சமத்துவம்’ என்னும் தெருவில் சாதி என்ற ‘வெறி நாய்கள்’ தன் உமிழ்நீரை ஒழுகவிட்டுக்
கொண்டே செல்கின்றன. இக்கொடிய எச்சில் பட்ட சில தெரு நாய்களும் தன் பங்குக்கு சமூகத்தைப்
பதம் பார்த்து விடுகின்றன. இதன் விளைவாக சமூகமே ’சாதிவெறி’ என்னும் சவக்குழிக்குள்
தள்ளப்படுகிறது.
கௌரவக்கொலைகள், தலை துண்டிக்கப்பட்ட
முண்டங்கள், மாறுகை மாறுகால் வாங்கப்பட்ட நடைபிணங்கள், உடலை கூறுபோட்டு ஏலம் விடும்
அவலங்கள், இன்னும் எத்தனையோ சொல்லொண்ணாத் துயரங்கள்தான் என்ன? இது சொல்லியும் மாளாது?
சொன்னாலும் மாறாது? இத்தகைய பிணந்திண்ணும் கரடிகள் நாட்டில் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன.
இதற்குத் தீர்வுதான் என்ன? ’தண்ணீரிலே விளைந்த உப்பு தண்ணீரால்தான் மடியும்’ என்பது
போல் சமூகத்தாலே முளைத்த ’சாதி’ சமூகத்தாலே அழிய வேண்டும்…………. அச்சமூகம் தோன்றிய வரலாற்றை
சற்றே நினைவு கூர்வோம்.
பண்டைய தமிழ்ச் சமூகம் நில
வரையறை அடிப்படையில் ஐந்து பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது.
1.
குறிஞ்சி – தலைமக்கள் இருவரும் சேர்ந்து புணரும் இடத்தைக்குறிப்பது
2.
பாலை – காதலால் கூடிப் பிரிந்த இருவரது பிரிவைக்
குறிப்பது
3.
முல்லை –
தலைவனது பிரிவை எண்ணி தலைவி ஆற்றாது வருந்துவது
4.
மருதம் – தலைமக்கள் தங்களுக்குள்ளே பிணக்குற்று ஊடல்கொள்வது
5.
நெய்தல் – தலைமகனை எண்ணி, தலைமகள் இரக்கம் கொள்வது.
இந்த ஐவகை நிலத்தின்கண் வாழும் மக்கள்
தங்களுக்குரிய திணை நிலைப் பெயராலேயே அழைக்கப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக,
குறிஞ்சி – குறவன் , குறத்தி
முல்லை - ஆயர் , ஆய்ச்சியர்
மருதம் - உழவர் , உழத்தியர்
நெய்தல் - நுளையர் , நுளைச்சியர்
பாலை -
எயினர் , எயிற்றியர்
என்று
அழைக்கப்பட்டனர். இத்திணைநிலைப் பெயர்களே பின்னாளில் முறையே நரிக்குறவர் சமுதாயமாகவும்,
கள்ளர் இனத்தவராகவும், குடியானவர்களாகவும், செம்படவர் கூட்டமாகவும், நிரை மேய்ப்பவர்களாகவும்
பிரிந்து அவரவர் நிலத்திற்கு ஏற்ற வேலைகளைச் செய்யலாயினர்.
நிலவுடைமைச் சமூகம் தோன்றிய பிறகு நால்வருணப்
பாகுபாடு(குல வேறுபாடு) மேலோங்கியது. பரந்து விரிந்த பெரிய நிலப்பரப்பை ஆட்சி செய்பவர்
’அரசர்’ எனவும், அரசருக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் ’அந்தணர்’களும், நாட்டின் பொருளாதாரத்தை
நிலைநிறுத்த வாணிபம் செய்ய ’வணிகர்’களும் , வாணிபத்திற்குத் தேவையான பொருளை ஈட்டித்
தர ’வேளாளர்’ மரபினரும் வாழ்ந்து வந்தனர்.
அரசருக்கு உரியவையாக படை, கொடி, குடை,
முரசு, புரவி, களிறு, தேர், தார், முடி, ஆரம், கழல் முதலியவை வகுக்கப்பட்டன.
அந்தணர்கள் ஈதல், வேட்டல், வேட்பித்தல்,
ஓதல் எனும் தொழிலை உடையவர்களாக கருதப்பட்டனர்.
வைசியர் என்று கூறப்படும் வணிகர்கள் ’எண்வகை
உணவு’ என்று சொல்லப்படும் பயறும் உளுந்தும் ; கடுகும் கடலையும்; எள்ளும் கொள்ளும்;
அவரையும் துவரையும் தங்கள் வாணிபத் தொழிலில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
வேளாளர் எனப்படும் ’வேளாண் மாந்தர்’ உழுதுண்டு
வாழ்தலே அவர்களது தலையாயத் தொழிலாக இருந்து வந்துள்ளது.
மேலும் ’விவசாயம்’ முறையாகக் காலூன்றத்
தொடங்கிய பின் தொழில் அடிப்படையிலான பிரிவுகள் தோன்றலாயின. இன்று சாதி வாரியான சமூகம்
தோன்ற விவசாயம் முக்கிய அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதை மறுக்க இயலாது.
விவசாய நிலத்தைப் பண்படுத்த ’கலப்பை’ எனும்
கருவி தேவைப்பட்டது. அதை வடிவமைக்க ஒரு ’தச்சர்’ தேவைப்பட்டார்.
நிலத்தில் குழிதோண்ட கடப்பாரை, ஆப்பு முதலியவை
செய்ய ஒரு ’கொல்லர்’ தேவைப்பட்டார்.
பண்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயம் செழிக்க
பூமிபூசை செய்ய ஒரு ,அந்தணர்’ தேவைப்பட்டார்.
நிலத்தில் வேலை செய்யவும், வேலையைப் பகிர்வதற்கும்
’குடியானவன்’ குடும்பங்கள் தேவைப்பட்டன.
பாடுபட்ட நிலத்திலிருந்து வரும் தானியங்களைச்
சேமித்து வைக்க பெரிய மட்கலங்கள் செய்ய ’குயவர்’ தேவைப்பட்டார்.
உழைத்துக் களைத்து வியர்வை பட்ட துணியை
வெளுத்தடுக்க ஒரு ’வண்ணார்’ தேவைப்பட்டார்.
உழைத்து சேர்த்த பணத்தில் பொன்னும், மணியும்
செய்து அழகு பார்க்க ஒரு ’தட்டார்’ தேவைப்பட்டார்.
உழைத்த களைப்பு தெரியாமல் இருக்க தேர்
, திருவிழா என்று களிப்பூட்டும் நிகழ்வுக்கு ஒரு பறை அடிப்பவன் தேவைப்பட்டான்.
இவ்வாறாக அவரவர் தொழிலில் நின்று தங்களுக்கு
ஒதுக்கப்பட்ட தொழிலைச் செவ்வனே செய்து தாமும் மற்றவரும் கூடி வாழ்ந்து இன்புற்றிருந்தனர்.
நாளடைவில் இத்தொழிற்பிரிவினரிடையே பாகுபாடு ஏற்பட்டு பல்வேறு சாதிகளாகவும், இனக்குழுக்களாகவும்
பிளவுற்றன. மக்களின் இன்பவாழ்வு குலையத் தொடங்கியது. அவரவர் வேலையை அவரவரே செய்ய வேண்டிய
நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் கூட்டுமுயற்சி தோல்வியுற்றது. குலத்தொழில்கள் நசியத்
தொடங்கின. ’விவசாயம்’ இன்று வெறும்சாயமாக மாறிவிட்டது. விவசாயம் நலிவடைய இத்தொழிற்பிரிவுகளில்
ஏற்பட்ட வீண் பிணக்குகளே காரணமாகி விட்டன.
அத்துடன்
நில்லாது, ”ஒரு ஊருக்கு பல வழி என்பது போல” ஒரு ஊருக்குள் பல சாதி என்றாகிவிட்டது.
தொழில் தெரிந்தவன் வேலை செய்ய மறுக்கிறான். இதனால் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகள்
….. விலைவாசி உயர்வுகள் ….. சரியான வடிவமைப்பின்மை ….. கால விரயங்கள்….. இன்னும் பல்வேறு
இன்னல்கள் அடுக்கடுக்காக நம் வாயிலில் காத்துக் கொண்டுதான் உள்ளன.
இன்று தம் குலத்தொழிலைச் செய்ய மறுக்கும்
சமத்துவப்பிரியர்கள் யாவரும் தங்கள் சாதிக்கென சலுகைகள் ஏதேனும் தரப்படுமாயின் அதை
வாங்க முன்வரிசைக்கு வந்து விடுகின்றனர். இன்று கல்விக் கூடங்களில் சாதியின் பெயரால்
தரப்படும் பல்வேறு சலுகைகள் எல்லாம் அச்சமூகம் பின்தங்கியவர்களுக்குக் கிடைத்தால் பரவாயில்லை.
அச்சமூகத்தில் முன்னேறியவரும் அந்த உதவித் தொகைகளைப் பெற முந்தும் அவலம் நம் நாட்டில் ஏராளமாகவும் அதிலும் தாராளமாகவும்
உள்ளது. அதைவிட முன்னேறிய சமூகத்தில் உள்ள ஏழைக்கு அத்தகை உதவித் தொகை கிடைப்பதில்லை.
காரணம் சட்டம். சட்டத்தின் இருட்டறைக்குள் ஏழை பணக்காரணாகவும் , பணக்காரனை ஏழையாகவும்
காட்டும் மந்திர வித்தை வேலை செய்கிறது. உதாரணமாக, முன்னேற்றம் அடையாத சமூகத்தில் ஒருவர்
சலுகை அடிப்படையிலோ அல்லது தன் கடின உழைப்பின் காரணமாகவோ நல்ல வேலையில் அமர்ந்து விடுகிறார்.
ஆனால் அவர் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை, கல்விக் கட்டணத்தில் சலுகை, தேர்வு விண்ணப்பக்
கட்டணங்கள் குறைவு, தேர்வில் மதிப்பெண் சலுகை, இட ஒதுக்கீடு, குறைவான தகுதி மதிப்பெண்,
வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அனைத்துமே சலுகையில் பெற்றவர், அவரது ஊதியத்தில் மட்டும்
எந்தச் சலுகையும் குறையாது முழுமையாக பெற்றுக் கொள்கிறார். ஆனால் இதே போன்ற சலுகைகளை
முன்னேறிய சமூகமாகக் கருதப்படும் ஒன்றில் வாழும் ஏழைக்குக் கிடைப்பதில்லை. சாதி வாரியான
மதிப்பெண் நிர்ணயத்தால் 0.1 மதிப்பெண்ணில் வேலை இழந்தோர் எத்தனை இலட்சம் பேர் இருப்பர்?
இதை எண்ணிப் பார்த்தால் சமத்துவம் என்பது சாதியில் இல்லை. வாழும் வாழ்வில் உண்டு என்பது
திண்ணம்.
அனைவருக்கும் சமமான கல்விச் சலுகைகள் தரப்படாத
வரை சாதி எனும் ஆணிவேரை சமத்துவம் எனும் புயல் பிடுங்க இயலாது.
முத்துராமலிங்க தேவரை முத்துராமலிங்கராக்கியது
சமச்சீர் கல்வி
வ.உ.சிதம்பரம் பிள்ளையை வ.உ.சிதம்பரனாராக்கியது
சமச்சீர் கல்வி
உ.வே.சாமிநாத ஐயரை உ.வே.சாமிநாதராக்கியது
சமச்சீர் கல்வி
அண்ணாமலைச்செட்டியாரைஅண்ணாமலையாராக்கியதுசமச்சீர்கல்வி
சரோஜினி நாயுடுவை சரோஜினி அம்மையாராக்கியது
சமச்சீர் கல்வி
இவ்வாறு
கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதிப் பெயர்களை நீக்கி சமத்துவக்கல்வி தந்து ’சாதியற்ற
பாடநூல்’ என்று சான்றளித்து விட்டு பாடநூலை பயிலும் மாணாக்கரிடம் சாதிச்சான்றிதழ் கேட்பது
முறையோ? இது தகுமோ?
”சாதி
என்னும் சனி தொலைந்தால் தான்
சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும்” -
கலைஞர்.
”சாதி என்னும் சான்றிதழ் தொலைந்தால் தான்
சமத்துவம்
என்னும் சான்றாண்மை பிறக்கும்”
என்றென்றும் பாடசாலைக்காக
ப.சரவணன்.
Thank you, read every one and understand avoid disparity system,,,,,
ReplyDeleteசாதி தமிழர்களின் இரத்தத்தில் கலந்துவிட்டது இது அழிவுக்குத்தான் என்று விரைவில் தெரியும்
ReplyDeleteஅது சாதி கலவரமாக தமிழகம் முழுவதும் நடக்கும்
இதை தடுக்க அரசு ஒன்னும் செய்யாது
அரசியல் வாதி அனைவருமே சாதியை நம்பித்தான் பொழப்பு நடத்துறாங்க
பள்ளியில் சாதி சான்றிதள் கேட்கக்கூடாது
பள்ளியின் பெயருக்கு பின்னாள் இருக்கும் சாதி பெயரை நீக்க வேண்டும் அப்படி நீக்க மறுக்கும் பள்ளிக்கு அங்கிகாரம் ரத்துசெய்ய வேண்டும்
சாதி கட்சி சாதி சங்கத்தை தடைசெய்ய வேண்டும்
Good idea, who will follow? Every place I met this problem ....even there is no changes highest higher education 43% in tamilnadu ,, but disparity system increased day by day.,,,
ReplyDeleteகட்டுரை என் பார்வையில் மிக்க நன்று... இருப்பினும் ஒவ்வொரு இடங்களில் பார்ப்பனிய குமுறல் மறைமுகமாக வெளிப்படுகிறது.... கட்டுரையின் மொழிநடை நன்று ..... இருப்பினும் இங்கே தலித் மக்கள் பெறும் இலவசங்களையும் முன்னுரிமைகளையும் படம் பிடித்து காட்டும் இந்நேரத்தில் ஜாதிக்கொடுமைகளால் தலித் படும் பாடுகளும் காட்டப்படவில்லை ஏன் இதுவும் மறைமுக கருத்து திணிப்பு தான்?
ReplyDeleteதமிழகத்தின் ஒரு பேருராட்ட்சி ஊராட்சிலாவது அந்தணர்கள் சாக்கடை அள்ளும் வேலை, பிணத்தை எரிக்கும் வேலையை செய்கிறார்களா?
இழிவேலை அனைத்தையும் தலித் மக்கள் செய்ய வேண்டுமாம் அவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளில் மட்டும் ஆதிக்க வெறியர்கள் பங்கு கேட்பார்களாம்....
முதலில் அனைவரையும் சமமாக மதியுங்கள்.... இந்தக் கட்டுரையின் நோக்கம் அந்தணர்கள் முதல் ஆதிதிராவிடர்கள் வரை சமமாக மதிக்கப்படுவதா? இல்லை தலித் மக்களின் உரிமை பரிக்கப்படுவதா??
இதை கட்டுரையாளர் தெளிவு படுத்துவாரா??
Today evening I will give clarification for you Mr. Rajalingam.
Deleteகல்வி உதவித்தொகை, கல்விக் கட்டணத்தில் சலுகை, தேர்வு விண்ணப்பக் கட்டணங்கள் குறைவு, தேர்வில் மதிப்பெண் சலுகை, இட ஒதுக்கீடு, குறைவான தகுதி மதிப்பெண், வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அனைத்துமே சலுகையில் பெற்றவர், அவரது ஊதியத்தில் மட்டும் எந்தச் சலுகையும் குறையாது முழுமையாக பெற்றுக் கொள்கிறார். ஆனால் இதே போன்ற சலுகைகளை முன்னேறிய சமூகமாகக் கருதப்படும் ஒன்றில் வாழும் ஏழைக்குக் கிடைப்பதில்லை. சாதி வாரியான மதிப்பெண் நிர்ணயத்தால் 0.1 மதிப்பெண்ணில் வேலை இழந்தோர் எத்தனை இலட்சம் பேர் இருப்பர்? இதை எண்ணிப் பார்த்தால் சமத்துவம் என்பது சாதியில் இல்லை. வாழும் வாழ்வில் உண்டு என்பது திண்ணம்.
ReplyDelete---
கட்டுரையின் இவ்வரிகள் சாதிய பாகுபாட்டால் வேலை இழந்ததை மட்டும் எடுத்துரைக்கிறது.... ஆனால் அதே சாதியப்பாகுபாட்டல் சாக்கடை அள்ளும் மக்களின் அவல நிலையை எடுத்துரைக்காதது ஏன்??
அனைவருக்கும் சமமான இடஒதுக்கீடு கேட்கும் இம்மறைமுக கட்டுரையாளர் தைரியமாக சாக்கடை அள்ளுதல், மலம்ஜல்ம் சுத்தம், முடிவெட்டுதல், துணி வெழுத்தல் போன்ற பணிகளிலும் உயர்குடியினருக்கு சமபங்கீடு கேளுங்கள் பார்க்கலாம்... இவ்வேலையும் பகுத்து கொடுத்தால் செய்வீர்களா??
super question..........
DeleteBrilliant question thank you very much sir
Deleteகட்டுரை வெளிப்படுத்திய கவலை,மாற்றம் ஒன்றே மறைமுக பதில்
ReplyDeleteராஜா சார் அருமை
ReplyDeleteநீங்கள் கேட்ட அனைத்துக் கேள்வியும்
சாட்டை அடி
ஆண்டாண்டு காலமாக தலித் மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளது
இப்பத்தான் ஏதோ இட ஒதுக்கீட்டில் படித்து வேலை வாய்ப்பு பெறுகின்றனர்
இதை பார்த்து சாதி வெறியர்கள் இட ஒதுக்கீட்டை தடை செய்ய சொல்கின்றனர்
நாங்கள் இட ஒதுக்கீட்டே விட்டுத்தர தயார்
நீங்கள் சாதியை ஒழிக்க தயாரா?
கலப்பு திருமணத்தை ஆதரிக்க தயாரா?
கலப்பு திருமணம் என்ற வார்த்தையை தவறு
சாதி விட்டு சாதியில் மனிதனுக்கும் மனிதனுக்கும் நடக்கும் திருமணத்திர்க்கு பெயர் கலப்புத திருமணமாம் சாதி வெரியர்கள் சொல்கிறார்கள்
மனிதனுக்கும் கழுதைக்கும் செய்யும் திருமணம் தான் கலப்பு திருமணம்
சாதி இருக்கும் வரை இட ஒதுக்கீடு இருக்கும்
நண்பரே!
ReplyDeleteநீங்க கூறுவது சரிதான்.
சலுகை என்ன தலித்து மட்டுமா தரப்படுகிறது.
பிற்படுத்த பட்டவருக்கு 29% மிகவும் பிற்படுத்த பட்டவருக்கு 20% ஆனால் 18% மீதமுள்ள 31%த்தில் யார் யாரெல்லாம் உங்களுக்கு தெரியும் தானே.
சலுகையை அனுபவிக்காதவர் யார் உள்ளர் ?
கேள்வி எழுப்ப யாருக்கும் தகுதி இல்லை.
இலவச பொருளுக்காக காத்திருக்கும் நாம
தனிப்பட்ட ஒரு சாதிக்கு மட்டும் கொடுக்கவில்லை
ஒரு சில சாதிக்காரர்களைத் தவிர அனைவரும் இட ஒதிக்கீட்டை அனுபவித்து விட்டு ஏதோ ஒரு சாதிக்காரங்க மட்டும் சலுகை அனுபவிக்கிற மாதிரி விமர்சனம் செய்வது தவறு.
சாதி சாதி என்று சதிராடும் சண்டியர்களே!
எல்லோரும் மனிதர்களே
மனித மாண்பு காப்பீர்
மனிடத்தை வாழ வைப்பீர்
நானிலம் போற்ற நல்-
தமிழ் நாட்டை பேணி காப்பீர்
நாமெல்லாம் தமிழரெண்போம்
நாடு போற்றும் நன் மக்களாவோம்
மனித உயிர்களெல்லாம்- சிறப்புற
உலக மக்கள் அனைவரும் ஒன்றென
சிந்திப்போம் சாதி பேதமின்றி
உலகை காக்க முயலுவோம்
நன்றி
தமிழ் அருவி
அவரவர் இனத்தில் காதல் செய்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை ..இந்த நாடக காதல் எனும் முறையற்ற செயலால் தான் இவ்வளவு பிரச்சனையும் வருகிறது ..இதை அனைவரும் உணர்ந்தால் நல்லது ..
ReplyDeleteகாதல் -அவரவர் இனத்தில் ....
Deleteஉங்கள் வரிகள் "இந்தியா -இந்து நாடு ;இந்து அல்லாதோர் நாட்டை விட்டு ஓடுங்கள் " என்று வந்த அறிவு முழக்கம் போல உள்ளது ....
தலித்துகள் இனி ஊருக்கு ஒதுக்குப்புறமாக அல்ல; இந்தியாவை விட்டு அல்ல; செவ்வாய் கிரகம் ..... வேண்டாம் ,அதுவும் பூமிக்கு பக்கத்தில் உள்ளதே??????
ம் ...
" தலித்துகள் புளூட்டோ க்கு ஓடி விடுங்கள் " என்று உத்தரவு வாங்கி நீங்களே விண்வெளி ஓடத்தில் ( உங்கள் அளவுக்கு பணம் இன்னும் சம்பாதிக்க வில்லை ) விலையில்லா டிக்கெட் கொடுத்து அனுப்பி விடுங்கள் ....
நாடக காதல் யார் கண்ணுக்கும் தெரியவில்லை ."நாடக கொலைகள் " தான் நடத்தப்படுகின்றன . எ.கா; இளவரசர் ,கோகுல் ராஜ் ...
ப.சரவணர் ...
(இந்த வலைத்தளம் எனது வலைத்தளம் என்ற காரணத்தால் " ர் " உபயோகிக்கிறேன்)
அரசு எங்களுக்கு தருவதோ 19% இட ஒதுக்கீடு . நீங்கள் அனுபவிப்பதோ 81%.... 19% ஐ விட்டுதர நாங்கள் தயார் . தலித்துகள் சமூகம் செய்யும் தொழில்களை "உங்கள் உயர்ர்ர்ர்ர்ர்ர்ர் சமூகம் ஒரு வருடம் செய்ய தயார் என்றால்".....
செய்வீர்களாளாளாளாளா??????
காதலுக்கு இனம் மதம் மொழி ஜாதி என்ற எதுவும் கிடையாது... ஆண் ஒரு பெண்ணை காதலிப்பது இயற்கை அதை ஜாதி வெறியர்களால் கவுரவ கொலைகளாக மாற்றுகின்றனர்....
Deleteதிரு சுந்தரம் அவர்களே காதல் தன் இனத்திற்குள் தான் வரவேண்டும் என்ற அர்சாணை ஏதும் உள்ளதா அல்லது புராணங்கள் இதிகாசங்கள் தமிழ் இலக்கியங்கள் சான்று ஏதேனும் கூற முடியுமா??
மேலும் கட்டுரையாளருக்கு ஒரு கேள்வி .... இடஒதுக்கீட்டையும் சலுகைகளையும் ரத்து செய்து விட்டால் சமத்துவம் பிறந்து விடுமா?? சாதி ஒழிந்து விடுமா?? இது யாரும், எங்கும் கூறாத வாதமாக உள்ளது....
தலித் ஒருவரின் சலுகை, இடஒதுகீடுசமமாக வேண்டும் ஆனால் தலித் ஒருவரோடு உட்காரக்கூடாதோ! தலித் இளைஞருக்கு பென் கொடுக்க கசக்குதா??
ஆயிரம் திறமைகள் அடுக்கடுக்காக இருந்தாலும் படிப்பு பதவி இருந்தாலும் பென் கொடுக்கும் போதும் பெண் எடுக்கும் போதும் மட்டும் ஜாதீ ஏன் பார்க்கிறீகள் ????
இதற்கு மேலும் பார்ப்பனிய போர்வையில் பகுத்தறிவாளர் வேடமிடும் ஏட்டளவு சீர்திருத்தவாதிகளே நீங்கள் உண்மையில் சமூக நடுநிலைவாதி என்றால் உங்கள் வீட்டு பெண்ணை தலித் ஒருவருக்கு கொடுங்கள் பார்க்கலாம்...
கட்டுரையாளர் குலத்தொழில் காத்த குட்டி இராஜாஜி போல.ஒரு மீடியாவில் கட்டுரை வெளியிட்டால் சமூகத்திற்கு அதன் வழியாக நல்ல கருத்துக்களை வெளியிடவேண்டும்.இவரது கட்டுரையோ குலத்தொழில் அழிந்துவிட்டதே என்று ஆதங்கப்படுகிறார்.குலத்தொழில் அழிந்தால் தானே சமத்துவம் பிறக்கும்.சமூக வேறுபாடு மலைக்கும் மடுவிற்கும் உள்ளது. இதை சமன் செய்ய கொடுக்கப்படும் சலுகையே இட ஒதுக்கீடு, இவை இனாம் அல்ல ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை.தகுதியுள்ள வர்களுக்குத்தான் அரசுப்பணி கொடுக்கிறார்கள்.சலுகை எவன் அப்பன் வீட்டும் சொத்து அல்ல அவை பொதுவுடைமையே.அதை பெறும் உரிமை காலம் காலமாக அடிமைபட்டு கிடக்கிற அனைத்து சமூகத்திற்கும் உண்டு.கட்டுரையாளருக்கு ஒரு வேண்டுகோள் இன்னும் சமூகத்தை ஆழமாக படியுங்கள். வெளீயீட்டாளருக்கு சமூகத்தை நிர்மூலமாக்கும் இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடாதீர்கள்.இக்கட்டுரையால் சமூகத்திற்கு என்ன பயன்? குலத்தொழில் படி கட்டுரையாளர் சமூகம் இனி சாக்கடை அல்லட்டுமே.சாக்கடை அள்ளியவர்கள் பிற தொழில் செய்யட்டுமே!
ReplyDeletegive respect to all. read the article once again. stupid article. jadhi veri pidithavan
ReplyDeleteFirst give respect to others because freedom is writing , do you know Nammakkal prof, he is working in Chennai presidency , why he is working?he said truth , if you right person tell your name gentleman, we want equal right thant is rights ,, if you don't give respect to others please make silence don't make vilance word we are having 6th sense ,,,
Deletesince we r having 6th sense,i ask the person who wrote this article to give respect to all. from that article only i found violence and not in my words. got it?. i am vani
DeleteThank you for your reply. I got it, I said our writter written is fundamental rights we can't criticism this article not only particular community , we give respect to others because we are human beings , suppose you don't give respect nothing to worry because we can't know about after death by people., if you felt ,, sorry,,, g
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபாடசாலை தனிமனித தாக்குதலை அங்கீகரிப்பது இல்லை . வருந்துகிறேன்
Delete0.01 % ல் வேலையை இழந்தீரா????
.நீங்கள் வேலையிழந்த காரணம் .
உங்களை விட உங்கள் இனத்தில் "அறிவாளர்" உள்ளார் என அர்த்தம்...
ram ram அருமையான பதிவு
ReplyDeleteமேல்த்தட்டு கீழ்த்தட்டு என்று பிரித்த சாதி வெறியர்களுக்கு
ReplyDeleteஇன்னும் சில ஆண்டுகளில் தெரியும் யார் மேல்த்தட்டு யார் கீழ்த்தட்டு என்று
Don't give words first create business idea and good education , we want migrate from hear and crate new country and avoid internal disparity sir, here also internal disparity going first we should avoid and fight against others ,,,,
Deleteகட்டுரையில் முரண்பாடான கருத்துக்கள் உள்ளது
Deleteமுனைவர் பட்டம் பெற்ற நீங்கள் கண்டிக்காதது வருத்தமளிக்கின்றது
I said disparity relating internal community not for others , here is not SC for single community window, BC is not single community window , MBC is not single community window, OC is not single community window and this is I said then only we should change our society please understand g, ,
Deletefirst we should change ,then the society will change automatically
DeleteI read it to my school children. Thank you very much
ReplyDeleteசரவணன் உங்கள் பார்வையில் தவறு உள்ளது, 0.01% ல் வேலை இழந்தவரின் நிலைக்கு வருந்தும் நீங்கள் நூற்றாண்டுகளாக கல்வி கற்கும் உரிமைகூட அவர்களுக்கு கொடுக்காமல் வைத்திருந்தோமே அதை மறந்து விட்டார்களா!!!
ReplyDeleteஅறிவியல் அறிவீரா சரவணன்??? கல்வியறிவுள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தையின் IQ விற்கும் கல்வியற்ற பெற்றோருக்கு பிறக்கும் குழந்தையின் IQ விற்கும் வேறுபாடு உண்டெனத்தெரியுமா???
அவர்களுக்கும் அன்றே கல்வி அளித்திருந்தாள், உம் போன்றோரின் வீண் வாதங்களுக்கு இன்று அவசியமில்லாமல் போயிருக்கும்.
Excellent
Deleteசரியான பதிவு செய்த பெயரிடப்படாத ஆசிரியருக்கு நன்றி
ReplyDeleteபாடசாலை வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் !
ReplyDeleteஇக்கட்டுரை குறித்த விமர்சனங்களை இரு நாட்களாக கூர்ந்து கவனித்து வருகிறேன். எந்த இடத்திலாவது பின் தங்கிய வகுப்பினராகக் கருதப்படுபவர்களுக்கான சலுகைகளை இரத்து செய்ய வேண்டும் என்று கூறப்படவில்லை. மாறாக பின் தங்கிய வகுப்பினராகக் கருதப்படும் மக்களில் எவருமே முன்னேற்றமடையவில்லையா? முன்னேற்றம் அடைந்தவருக்கு ஏன் சலுகை தரப்பட வேண்டும் என்பதே கருத்து.
1. எடுத்துக்காட்டாக பின் தங்கிய வகுப்பினராகக் கருதப்படும் ஒரு கல்லூரிப் பேராசிரியரின் தற்போதைய மாத வருமானம் 1,06,000 ரூபாய். அவர் சொந்தமாக 27 இலட்சம் ரூபாய் செலவில் வீடும், 9 இலட்சம் மதிப்புள்ள மகிழுந்தும் வைத்துள்ளார். இது தவிர அனைத்து ஆடம்பரப் பொருட்களும் அவரது வீட்டில் அடிக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவரது பிள்ளைகள் ஒவ்வொருவரின் பெயரிலும் 5,00,000 ரூபாய்(3 நபர்) வங்கியில் செலுத்திப் பாதுகாத்து வருகிறார். அவரது பிள்ளைகள் படிப்பதற்கென தனியான அறை வசதிகளும் செய்து தந்துள்ளார். பிள்ளைகளுக்கு வசதிக் குறைவு என்று ஒருபோதும் சொல்ல இயலாது.
2. முன்னேறிய சமூகமாகக் கருதப்படும் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அன்றாடம் தன் பிழைப்புக்கு தினக்கூலியாக ரூ. 200 ஐ ஊதியமாகப் பெற்றுக் கொண்டு அந்த வருமானத்தில் தன் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி காலத்தை கடத்துகிறார். தன் பிள்ளைகளில் ஒருவரை தேனீர் கடையிலும், மற்றொருவரை மிகவும் துயரப்பட்டு பதினொன்றாம் வகுப்பில் சேர்த்து விட்டுள்ளார். இவரது மனைவி 100 நாள் வேலைக்குச் சென்று குடும்ப பாரத்தில் தானும் பங்கு கொள்கிறார். ஓட்டு வீட்டில் வசிக்கும் இவரது வீட்டில் எந்த ஆடம்பரப் பொருளும் இல்லை(விலையில்லா மின்விசிறி, அரவை இயந்திரம் தவிர). இவர் எப்பொழுதும் இரு வேலை மட்டுமே உணவு உண்கிறார். வறுமை அவரை வாட்டுகிறது.
மேலே குறிப்பிட்ட இரு வேறுபாடுகளில் யாருக்கு சலுகை தரப்பட வேண்டும்? இங்கு முன்னேற்றம் அடைந்திருப்பவர் யார்? எவர் முன்னேற வாய்ப்புகள் தரப்பட வேண்டும்? எதற்காக சலுகை? இங்கு பின் தங்கியவர் யார்? பின் தங்கியவர்? முன்னேறியவர் என்பதற்கான எல்லை (அ) வரையறைதான் என்ன? எதன் அடிப்படையில் இந்த வேறுபாடுகள் வகுக்கப்பட்டன? எதற்காக வகுக்கப்பட்டன? ஏன் வகுக்கப்பட்டன?
தீர்வுகள்………………………….. வாசகர்களே முடிவெடுக்கட்டும்.
மேலும், இக்கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள படம் தான் இக்கட்டுரையின் ஆணிவேரை தலைகீழாக்கியதாக நான் கருதுகிறேன். ஏனெனில் 1000 பக்கங்களில் ஏற்படுத்த முடியாத (அ) சொல்ல முடியாத தாக்கத்தை ஒரு படம் ஏற்படுத்திவிடும் எனும் சீனப் பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது. அப்படத்தில் இடம்பெற்றுள்ள SAY NO TO CASTE BASED RESERVATION என்ற வாசகமும், அப்படத்தில் இடம் பெற்றுள்ள பெண்ணின் வாய் மூடப்பட்ட சித்தரிப்பையும் பாடசாலை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் கட்டுரையின் எந்த இடத்திலும் இட ஒதுக்கீட்டைத் தடை செய்ய வேண்டும் என்று கூறவில்லை என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். சாதி என்பது சகுணம் போன்றது. அதைப் பார்ப்பது மூடன் நம்பிக்கை என்பது தலைப்பிலேயே உணர்த்தி விட்டேன். ’சாதிச் சான்றிதழ் தொலைந்தால் சமத்துவம் பிறக்கும்’ என்று முடித்திருந்தேன். சில சமத்துவமதியாணிகள் சாதிக்கு சான்றிதழ் கேட்டு மறு விண்ணப்பம் கோருகின்றனர். ’சான்றிதழ்’ என்பதால் தொலைக்க எண்ணமில்லையோ???????
பதிவு: கட்டுரையாளர்
ஐயா ஒரு குடும்பத்தை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தை எடை போடுவது மிக தவறு மேலும் உங்கள் கட்டுரையின் நோக்கமும் படத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை....
Deleteஎன் கருத்துக்கு தங்களிடம் பதில் உண்டா??
சரி சாதி என்னும் சகுணம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டால் ஒழிந்து விடுமா??
என் பதிவுக்கு உங்களிடம் ஆக்கப்பூர்வமான பதிலை எதிர்பார்கிறேன்
நண்பர் சரவணன் அவர்களே .....
Deleteஅந்த கல்லூரி பேராசிரியர் தலித் சமூகத்தினராக இருந்தாலும் உச்சகட்ட வருமான வரம்பு மீறியதற்காக அவரது பிள்ளைகளுக்கு சலுகைகளை எதிர்பார்க்க மாட்டார் . கிடைக்கவும் செய்யாது ....
டீ கடைகாரர் பிள்ளைகள் படிக்க தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு , வேலை பெறும் போது ரிசர்வேஷன் உள்ளதே....
நீங்கள் சொல்லும்படி " வருமான வரம்பு " படி சலுகைகளை அளித்தல் லஞ்சத்திற்கு வலு கூட்டும் .பலனும் இருக்காது .....
சரவணன் சார் நீங்கள் கூறியது உண்மை தான்
ReplyDeleteசாதி ரீதியாக இட ஒதுக்கீடு தரக்கூடாது
குடும்ப பொருளாதாரம் இதை வைத்து மட்டும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே இதை விவாதத்தை என் ஆசிரியர்களிடம் வைத்தேன் இதனை ஏற்றுக்கொண்ட ஆசிரியர் சாதி பாகுபாடு சாதியை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தை முன்னிருத்தும் போது அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை
சாதி ஏற்றத்தாழ்வை விரும்புகின்றனர்
ஆனால் தலித் மக்கள்ளுக்கு இட ஒதுக்கீடு என்று வந்தவுடன் பிற சாதி காரர்கள் வருந்துகின்றனர் வேலை வாய்ப்பை பற்றி
சாதி விட்டு சாதி பெண் எடுக்க தயாரா?
சாதி பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீட்டே விட்டுத்தர முடியாது
சரவணன் அவர்கள் பதில் தரவும்
சாதி தான் சமுகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்
ReplyDeletei agree with u muthu pandi sir
Deleteவாசகர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteவருமானவரி கட்டுபவர்கள் யாவரும் முன்னேற்றம் அடைந்தவர்களாகக் கருதி, அவருக்கு தரப்படும் சலுகைகளை வருமானம் குறைந்த நபர்களுக்குத் தரலாமே?
மேலும், இட ஒதுக்கீடு அழிந்தால் சாதி ஒழிந்து விடுமா? என்ற வினா ”சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்ற பழமொழியை நினைவுகூற வைக்கிறது. சாதி உள்ள வரைதான் இடஒதுக்கீடு… இட ஒதுக்கீடு உள்ளவரைதான் சாதி. உங்களுக்கு சாதி ஒழிய வேண்டுமா? அல்லது இடஒதுக்கீடு ஒழிய வேண்டுமா? இவ்வினாவிற்கு சமத்தான பதிலை சமத்துவம் எதிர்பார்க்கிறது.
மேலும், காதல் செய்பவர்களுக்கு என தனியான வரையறை உண்டா? அல்லது இலக்கியங்கள் ஏதேனும் வரையறுத்துள்ளனவா? என்று நண்பர் வினவும் வினாவிற்கு தமிழ் இலக்கணம் வரையறுத்துள்ளதை இங்கு சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
பண்டைய தமிழர் தம் வாழ்வில் காதல் களவில் தொடங்கி கற்பில் முடிந்தன. காதலர்கள் உள்ளப் புணர்ச்சியில் திளைத்து, மெய்யுறு புணர்ச்சியில் மகிழ்ந்தனர்.
உள்ளத்தால் புணரும் தலைமக்கள் பல்வகைப்பட்ட ஒப்புமை குணங்களில் ஒத்திருக்க வேண்டும். இதைத் தமிழுக்கும், தமிழருக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்,
”பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காமவாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” - (தொல்.மெய்பா-24)
என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
1. பிறப்பு – பிறப்பு என்பது குலத்தில் ஒத்தவராக இருத்தல் வேண்டும்.
2. குடிமை - குடிமை என்பது குலத்தில் சிறந்தவராக இருத்தல் வேண்டும்.
இங்கு ஒரு குலத்திலேயும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்ற கருத்து பெறப்படுகிறது.
3. ஆண்மை – ஆண்மை என்பது ஆள்வினையுடைமை உடையவனாக இருத்தல் ஆகும்.
”பெருமையும் உரனும் ஆடூஉ மேன” – (தொல்.களவு - 7)
’பெருமை’ என்பது பழிபாவத்திற்கு அஞ்சுதல். ’உரன்’ என்பது அறிவு.
பழிச்சொல்லிற்கும், பாவச்செயலுக்கும் அஞ்சி, அவற்றை நீக்கித் தன்னை, தான் கொண்டொழுகுவதே பெருமையாகும்.
சென்ற இடங்களில் மனத்தைச் செல்லவிடாது, தீமையை நீக்கி நன்மையின் பால் உய்க்கும் நல்லறிவே உரனாகும்.
இத்தகைய சிறப்பியல்புகள் தலைவனுக்கு இன்றியமையாததாகும்.
தலைமகள் மாட்டுப் பெண்மையும் இருத்தல் நலம்.
”அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப” - (தொல்.களவு - 8)
அச்சமும் , நாணமும் , பேதமையும் நாள்தோறும் தாமாகவே வந்து சேர்தல் பெண்மைக்கு அழகாகும்.
பயன் கருதி அச்சம் கொள்வதும் , பழிக்கு அஞ்சுவதால் நாணமும் , இடம் , பொருள் , ஏவல் அறிந்து தெரிந்தும், தெரியாதது போல் இருப்பதால் மடமையும் பெண்மைக்குரிய சிறப்பியல்புகளாகும்.
4. ஆண்டு - ஆண்டு என்பது ஒருவரையொருவர் முதியவராக இல்லாது ஒத்த பருவமுடையவர்களாக இருத்தல் வேண்டும். அது குழவிப்பருவம் கழிந்து தலைவனுக்கு 16 வயதும், தலைவிக்கு 12 வயதும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இன்று அது 18 வயது என வரயறுக்கப்பட்டுள்ளது.
5. உரு – உரு என்பது வனப்பு ஆகும். இங்கு வனப்பு என்பது உடல் அழகையும், பொலிவையும் குறிக்கிறது. இதல் தலைமக்கள் ஒப்பாக இருத்தல் வேண்டும்.
6. நிறுத்த காமவாயில் - நிறுத்த காமவாயில் என்பது ஒருவர்மாட்டு ஒருவருக்கு நிகழும் அன்பு.
7. நிறை – நிறை என்பது மறை பிறர் அறியாமை ஆகும். அது அடக்கமாகும்.
8. அருள் – அருள் என்பது பிறரது வருத்தத்திற்குப் பரிந்து காட்டும் கருணை ஆகும்.
9. உணர்வு – உணர்வு என்பது அறிவு. அது இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.
10. திரு – திரு என்பது செல்வம். இது தலைமக்களது குடும்பச் செழிப்பினைப் பொருத்திப் பார்ப்பதாகும்.
மேலே கூறப்பட்ட 10 குணங்களில் ஒத்த தலைவனும், தலைவியும் காதல் கொள்வதே சிறப்பாக அமையும். எனினும், தலைவன் தலைவியைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருப்பினும் குற்றமில்லை என்பர்.
ஆனால் இந்த 10 குணங்களில் தலைவி, தலைவனைக் காட்டிலும் சிறந்தவனாக இருப்பின் அது அன்புடைய காதல் ஆகாது.
“ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோனாயினும் கடிவரை இன்றே” - (தொல்.கள - 2)
மேற்கூறப்பட்ட விதிகள் யாவும் தொல்காப்பியத்திற்கு முதல் உரை வகுத்த ’உளங்கூர் கேள்வி’ ”இளம்பூரணர்” எழுதிய உரைவளம்.
கற்பொழுக்கம் என்று கூறப்படும் மனைவாழ்க்கை பெற்றோரின் சம்மதத்தால் நிகழ வேண்டும் என்று கற்புக்கு இலக்கணம் வகுத்தார் தொல்காப்பியர்.
”கற்பெனெப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவோன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே”(தொல்.கற்பு - 1)
”திருமணத்தோடு பொருந்தி பெண் எடுப்பதற்குரிய மரபினை உடைய தலைவன், பெண் கொடுப்பதற்குரிய மரபினை உடைய பெற்றோர் கொடுப்பப் பலர் அறிய மணந்து வாழும் மனைவாழ்க்கையே கற்பு”.
குலம் அப்படினா
ReplyDeleteநான் ஆணிண் விந்தனுவும் பெண்ணிண் கருமுட்டையும் இணைந்து பிறந்ததினால்
நான் மனித குலம்
நீங்கள் எந்தக் குலத்தை சொல்கின்றீர்கள்
சாதி வெறிபிடித்தவர் போல் உள்ளது நீங்கள் காட்டிய நூல்
நீங்கள் குறிப்பிடும் குலம் என்ன?
மனிதன் முதன் முதலாக தோன்றிய வரலாறு தெரியுமா கட்டுரை ஆசிரியருக்கு
தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியத்தில் மெய்பாட்டியல் என்ற இயலில் நூற்பா 24 ன் விளக்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்க.
Deleteதொல்காப்பியரின் பொருள் இலக்கணம் தமிழர் தம் வாழ்க்கைக் கட்டமைப்பு. தமிழன் கற்பு நெறியோடு வாழ் ந்தான் என்பதற்கும், வாழ வேண்டும் என்பதற்கும் வகுக்கப்பட்ட நீதி.
“வல்லான் வகுத்ததே வாய்க்கால்”
மேலும்,
ஒருவன் ஒருத்தியை அன்பினால் கூடியொழுகிப் பின்னர் அவளை அறியேன் எனப் பொய் கூறுதலும், நின்னைப் பிரியேன் எனத் தெய்வத்தின் முன்னிலையில் உறுதி கூறிப் பின் அதனை வழுவிக் கடைபிடித்தலின்றி ஒழுகுதலுமாகிய தீய வழக்கங்கள் இந்நாட்டில் தோன்றின. அதன் பின்னரே சான்றொராகிய குடும்பத் தலைவர்கள், கணவனும் மனைவியும் பிரிவின்றி வாழ்வதற்குரிய மணச் சடங்காகிய திருமணத்தை வகுத்தமைத்தார்கள். இச்செய்தியை,
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
ஐயர் - தலைவன் ; கரணம் - திருமணம்
1. இதில் பொய்யாவது செய்த்தனை மறைத்தல் ஆகும்.
2. வழுவாவது செய்தன கண்மூடி நில்லாது தப்பியொழுகுதல்
”ஐயர் யாத்தனர் கரணம் என்ப” எனத் தொல்காப்பியர் தமக்கு முன்னோர் கூற்றாக வைத்து உரைத்தலால் இத்திருமண வரையறை அவர்காலத்துக்கு முன்னரே(கி.மு) தமிழ் முன்னோர்களால் விதிக்கப்பட்டது என்பது நன்கு புலப்படும். முன் பொய்யும் வழுவும் தோன்றாத களவு மணத்தின் பின் அவை தோன்றியதற்குக் காரணம் தமிழரோடு தொடர்பில்லாத வேற்றினத்தாரது வருகையே காரணமாதல் வேண்டும்.
இதற்கு மேல் தமிழரி ன் கற்பு வாழ்வு பற்றித் தெரிந்து கொள்ள
1. ”தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை”
2. “கற்புநெறி”
3. “முல்லை மணக்கிறது”
4. ”தமிழுக்கு நிறமுண்டு”
5. “சிலப்பதிகாரம்”
இன்னும் ஏராளமான நூல்கள் தமிழர் வாழ்ந்த வாழ்க்கை குறித்து வந்துள்ளன. நண்பர் அந்நூல்களின் கருத்தை ஆழ்ந்து கவனித்து தமிழன் வாழ்வுக்கு வகுத்த இலக்கணத்தை உணர்ந்து கொள்வீராக!!!
குலம் அதற்க்கான.விளக்கம் தேவை
ReplyDelete