மதுரையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சங்க மாநில
செயற்குழுக்கூட்டம் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்
ரமேஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜெயசந்திரன், ரவிச்சந்திரன் உட்பட
பலர் பங்கேற்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். 2004 முதல் 2006 வரை
தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் பணி காலத்துடன் சேர்க்க
வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு சட்டம்
பிறப்பிக்க வேண்டும். கற்பித்தல் தவிர வேறு பணிகள் செய்ய ஆசிரியர்களை
அதிகாரிகள் வற்புறுத்தக்கூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...