அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை உடனே வழங்க
வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் பெ.கருணாநிதி,
செயலாளர் எஸ்.சுனில்குமார், பொருளாளர் கே.ஆர்.செல்வி ஆகியோர் விடுத்துள்ள
அறிக்கை:
கூடலூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வித் துறையின்கீழ் உதவிபெறும் பள்ளி
ஆசிரியர்களுக்கு, மாத ஊதியம் உள்பட அனைத்து பணப் பலன்களையும் உதவித் தொடக்க
அலுவலர்கள் காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஆணை
பிறப்பித்தும், அது முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. மே மாத ஊதியம் ஜூலை
மாதம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
மாத ஊதியம் வழங்குவதில் கருவூலத்தில்தான் பிரச்னை உள்ளது என ஆசிரியர்கள்
அலைக்கழிக்கப்படுகின்றனர். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உள்ள
காலிப் பணியிடங்களை நிரப்பி, ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை
எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...