Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், நூலகர் பணி

       அண்ணா பல்கலைக்கழத்தின் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், நூலகர் மற்றும் உடற்பயிற்சிக் இயக்குநர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 002/RC/CC-FR/2015 தேதி: 11-07-2015


கல்லூரிகள் விவரம்:

1. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, அரியலூர்

2. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, ஆரணி

3. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, திண்டுக்கல்

4. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, காஞ்சிபுரம்

5. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, நாகர்கோவில்

6. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, பண்ருட்டி

7. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, பட்டுக்கோட்டை

8. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, ராமநாதபுரம்

9. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, திருக்குவளை

10. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, தூத்துக்குடி

11. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, திண்டிவனம்

12. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

13. பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி, விழுப்புரம்

14. பிராந்திய அலுவலகம், கோயம்புத்தூர்

15. பிராந்திய அலுவலகம், மதுரை

16. பிராந்திய அலுவலகம், திருநெல்வேலி



பணி: உதவி பேராசிரியர்

காலியிடங்கள்: 112

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. சிவில் - 39

2. மெக்கானிக்கல் - 38

3. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் - 15

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.இ முடித்திருக்க வேண்டும்  முனைவர் பட்டம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.



பணி: கல்லூரி நூலகர்

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000

தகுதி: நூலகர் துறையில் முதுகலை பட்டம் பெற்று NET/SLET/SET போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு NET/SLET/SET தேர்வு தேர்ச்சி அவசியமில்லை.



பணி: உடற்பயிற்சிக் இயக்குநர்

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்று NET/SLET/SET போன்ற ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு NET/SLET/SET தேர்வு தேர்ச்சி அவசியமில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.400. இதனை பதிவாளர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu என்ற இணையதளத்தை கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பதிவாளர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/advt_faculty.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive