விழுப்புரம்
அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு,
2015--16ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது.
மருத்துவம் சார்ந்த படிப்புகளான பி.பார்ம்., பி.எஸ்.சி., நர்சிங், ரேடியோலாஜி இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி, அரசு மருத்துவக் கல்லுாரிகள் அனைத்திலும் நேற்று துவங்கியது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், நேற்று காலை 10.15 மணிக்கு, டீன் டாக்டர் சிவக்குமார் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:மருத்துவம்சார்ந்த படிப்புகளில் சேர வரும் 17ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக, 2 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள், வரும் 18ம் தேதி மாலை 5 :00 மணிக்குள், குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்கள் தேவைப்படுவோர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், 350 ரூபாய் மதிப்புக்கு, செக்ரட்டரி- செலக்ஷன் கமிட்டி, கீழ்பாக்கம் என்ற முகவரியில் மாற்றத்தக்க வகையில், டிடி அளித்து, விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, டீன் சிவக்குமார் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...