சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு இசை, கவின் பல்கலைக்கழகத்தில் ஓவியம்,
நாமசங்கீர்த்தனம் ஆகியவற்றில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்படுகிறது
என்று துணைவேந்தர் வீணை காயத்ரி தெரிவித்தார்.
மேலும், எம்.ஏ (குரலிசை), எம்.ஏ (வீணை), எம்.ஏ (வயலின்), எம்.ஏ
(மிருதங்கம்), எம்.ஏ (நாதஸ்வரம்), எம்.ஏ (பரதநாட்டியம்), எம்.ஏ
(தனிப்பயிற்சி), எம்.ஏ (திரைஇசை) போன்ற படிப்புகளுக்கு வருகிற 25-ஆம்
தேதியுடன் மாணவர் சேர்க்கை முடிவடைகிறது.
ஓவியம், நாமசங்கீர்த்தனம் சான்றிதழ் படிப்புக்கு 10-ஆவது வகுப்பு தேர்ச்சி
பெற்றிருந்தால் போதும். எம்.ஏ முதுநிலை படிப்புக்கு இளங்கலையில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். ஆனால் வயது வரம்பு கிடையாது. ஆர்வம் உள்ளவர்கள்
சேர்ந்து படிக்கலாம் என்று வீணை காயத்ரி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...