வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி
தெரிவித்தார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. இதன்படி,
மனுதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து, 45
வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
தனியார், சுய வேலைவாய்ப்புகள் இல்லாமல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50
ஆயிரத்துக்குள் இருந்து, அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகள் பெற்றுள்ளவர்கள்
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறலாம்.
மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவேட்டில் உள்ள
மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழில் பயிற்சி மையத்திலுள்ள
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று
விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு
அலுலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளாக வேலையில்லாமல் காத்திருப்போர்,
சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனம் தொழில் திறனற்றோர்க்கான
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பித்து, ஒராண்டு
முடிந்தவர்கள் சுய உறுதி மொழி ஆவணம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண்,
உதவித்தொகை எண் உள்ளிட்ட விவரங்களை நேரில் சமர்பிக்க வேண்டும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...