பள்ளிக் கல்வி, எஸ்.எஸ்.ஏ., மற்றும்
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர்களின் உத்தரவுகளை ஒரே நேரத்தில் பின்பற்ற
முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர்.அரசு
ஆசிரியர்கள் 12 லட்சம் பேரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி
ஆசிரியர்கள். இதில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும்
ஆசிரியர்களில், 90 சதவீதத்திற்கும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளிலும்
ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் நடத்துகின்றனர்.
ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ.,), மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டங்கள் சார்பில் அவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ.,), மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டங்கள் சார்பில் அவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
எஸ்.எஸ்.ஏ., சார்பில் பத்து பயிற்சிகள்
பள்ளி வேலை நாட்களிலும், ஏழு பயிற்சிகள் சனிக்கிழமையன்றும் நடக்கிறது.
ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில் 15 பயிற்சிகள் வேலை நாட்களில் நடத்தப்படுகின்றன.
இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க அத்திட்ட இயக்குனர்கள்
உத்தரவிட்டுள்ளனர்.
இதை பின்பற்றி பயிற்சிகளில் பங்கேற்கும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களின் (இவர்கள் 6-8ம்
வகுப்புக்கும் பாடம் நடத்துகின்றனர்) கற்பித்தல் பணி பாதிப்பதாக சர்ச்சை
எழுந்து உள்ளது. பயிற்சி நாட்களில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் அனைத்து
ஆசிரியர்களும் பங்கேற்க செல்வதால் பள்ளிச் செயல்பாடு பாதிக்கிறது. மேலும்
கல்வி இயக்குனர் உத்தரவுப்படி பத்தாம் வகுப்பிற்கு 'சிறப்பு வகுப்பு'
நடத்தும் ஆசிரியர்களும் பயிற்சிகளில் பங்கேற்க உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த இயக்குனர் உத்தரவை பின்பற்றுவது என்ற
குழப்பமும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறையில் உத்தரவு பிறப்பிக்கும் மூவரும் இயக்குனர்கள். அவர்களின் உத்தரவுகளைகண்டிப்பாக
பின்பற்ற வேண்டும். திட்டங்களுக்கு அந்தந்த ஆண்டு ஒதுக்கப்படும் நிதிக்கு
ஏற்ப, அதன் செலவினத்தை கணக்கு காட்டுவதற்காக பயிற்சி பெறும் ஆசிரியர்களின்
எண்ணிக்கையை அவ்வப்போது தான் முடிவு செய்கின்றனர். நடப்பு கல்வியாண்டில்,
ஒரு வட்டார வளமையத்தில், குறைந்தபட்சம் 180 ஆசிரியர் களுக்கு பயிற்சி
அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எந்த சம்பந்தம் இல்லாத பத்தாம்
வகுப்பு ஆசிரியர்களை எஸ்.எஸ்.ஏ., பயிற்சிகளிலும், ஆறு முதல் எட்டாம்
வகுப்பு ஆசிரியர்களை ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திலும் பங்கேற்க வலியுறுத்துகின்றனர்.
பயிற்சி... பயிற்சி... என சென்று விடும்
ஆசிரியர்களால் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி குறைந்தால் கல்வி
இயக்குனருக்கு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு
ஆசிரியர்களை இப்பயிற்சியில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஆசிரியர்கள்
எதிர்பார்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...