பணி நியமனம்
செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு, பணிவரன் முறை வழங்காத மேல்நிலைக்
கல்வித்துறை இணை இயக்குநரைக் கண்டித்து, வரும் 17-ஆம் தேதி முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் ஆ.ராமு
வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில், வேலைவாய்ப்பு
அலுவலகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 2010 முதல் 2015 மார்ச்
வரை ஆயிரக்கணக்கான முதுநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டு,
ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு, பணி நியமன ஆணை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பணி வரன்முறை
ஆணை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், பணி நியமனம் செய்யப்பட்ட,
ஆயிரக்கணக்கான முதுநிலை ஆசிரியர்கள், அரசு ஊழியருக்கான எந்த அடிப்படை
உரிமைகளையும் பெற முடியாமல், மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அனுப்பி உள்ள ஒரு சில
பணிவரன் முறை ஆணைகளிலும், தேதி மற்றும் ஆண்டில் குளறுபடி காணப்படுகிறது.
கடந்த 2010 முதல் 2015 வரை நியமிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு
முறையான பணிவரன் முறை ஆணை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு
பலமுறை, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்
சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பணிவரன் முறை ஆணை பற்றி கண்டு
கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதால், மேல்நிலைக் கல்வி இணை இயக்குநரைக்
கண்டித்து, ஜூலை 17-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்
முன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு
செய்துள்ளது.
sir, we appointed on 31/12/2012 and joined in the pg post 02/10/2013 I have downloaded a file in kalvisolai and kalviseithi website a pg regularization order, and in that order R.C date has changed like 31/12/2013 but the correct R.C date 31/12/2012
ReplyDelete