டான்சி
நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் கணக்காளர் பணிக்காலியிடங்களுக்கு
மாநில அளவில் தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: டான்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரால் மே்ற்குறிப்பிட்ட பணிக்காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு இளநிலை பட்டம் மற்றும் கணிப்பொறி கல்வியும் பெற்றிருப்பது அவசியம் ஆகும். அதோடு, எஸ்.சி, எஸ்.சி.எ, எஸ்.டி ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள்ளும், எம்.பி.சி, பி.சி.எம், பி.சி.ஓ ஆகியோருக்கு 18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு சலுகை எதுவும் கிடையாது.
வர்த்தக கணக்காளர் பதவி: ஆதரவற்ற விதவை எஸ்.சி.ஓ. எஸ்.சி.எ ஆகியோருக்கு 13.07.2005 வரையிலும், இதரபிரிவினருக்கு 22.8.2012 வரையும்,
கலப்பு திருமணம் புரிந்தோருக்கு எஸ்.சி.எ-12.8.2010 வரையும், எஸ்.சி.ஓ-5.3.2001 வரையும், முன்னுரிமையில்லாதவர்கள் எம்.பி.சி(பெண்கள்)-27.6.2003 வரையும், பி.சி(பெண்கள்)-21.8.2001 வரையும், இதர பிரிவினர்(பெண்கள்)-24.7.2000, பி.சி(பொது)-6.7.2001 வரையும், ஓ.சி(பொது)-31.7.2000, மாற்றுத்திறனாளிகள்-31.12.1996 வரையும் பதிவு செய்திருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் பணி: ஆதரவற்ற விதவை எஸ்.சி.ஓ-12.7.2006 வரையும், பி.சி.எம்-14.2.2015 வரையும், இதர பிரிவினர் 19.8.2002 வரையும், முன்னுரிமையில்லாதவர்கள் பி.சி.எம்(பெண்கள்)-5.8.2003 வரையும், பி.சி.ஓ(பொது)-2.3.1998 வரையும், எஸ்.சி.எ(பொது)-19.9.2000, எம்.பி.சி(பொது)-26.6.2009 வரையும், மாற்றுத்திறனாளிகள் 31.12.1998 வரையும் இருக்க வேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதி, பதிவு மூப்புள்ள பதிவுதாரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட இருக்கிறது. அதனால், அசல் கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவைகளுடன் நேரில் வருகிற 20ம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...