சிறுபான்மைப் பிரிவு பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில்
உள்ள அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் கிறிஸ்துவர்,
இஸ்லாமியர், புத்த மதம், சீக்கியர், பார்சி, ஜெயின் வகுப்பைச் சேர்ந்த
மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில்
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற
புதிதாக விண்ணப்பிக்கவும், புதுப்பித்தில் செய்யவும் ஜூலை 15-ஆம் தேதி வரை
அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,
கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரையிலும், கல்வி
நிலையங்கள், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,
சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பங்களைச் சமர்பிக்க ஆகஸ்ட் 31-ஆம்
தேதி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒன்பது,
பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, கல்வி நிலையங்கள்
விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்ப ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில் அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...