மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை, பள்ளிகள்
மூலமே வாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில்,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டில், 6ம்
வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல
திட்டங்களுக்காக, ஜாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ்
கேட்கப்படுகின்றன.
கல்வி உதவித் தொகை, இலவசத் திட்டங்கள் போன்றவற்றை வழங்க, இந்த சான்றிதழ்கள்
அவசியம். ஆனால், இந்த சான்றிதழ்களை, 'ஆன் - லைன்' மூலம் பெறுவதில் தாமதம்
ஏற்படுகிறது. எனவே, பள்ளிகள் மூலமே சான்றிதழ் வாங்கித் தர, பள்ளிக் கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது. எல்லாப் பள்ளிகளும், மாணவ, மாணவியரின் பெயர்
உள்ளிட்ட விவரங்களை, தனித்தனி விண்ணப்பங்களில் பூர்த்தி செய்து, உரிய
முகவரி ஆவணங்களுடன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்
சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும், 31ம் தேதிக்குள், தமிழக அரசின் பொது இ - சேவைத் துறை மூலம்
சான்றிதழ்களை பெற்றுத் தர, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...