பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங், எலக்ட்ரிகல் பிரிவுக்கு நாளை முதல் கவுன்சிலிங் தொடங்குகிறது.டிப்ளமோ,
பி.எஸ்சி., படித்தவர்கள், இன்ஜினியரிங்கில் நேரடி இரண்டாம் ஆண்டில்
சேர்ந்து படிப்பதற்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி.,
கல்லுாரியில் கடந்த ஜூன் 26ல்
தொடங்கியது.
பொது பிரிவான சிவிலுக்கு 27-ம் தேதி தொடங்கியது. 4,200 பேர்
அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 3580 பேர் மட்டுமே பங்கேற்று, சேர்க்கை ஆணை
பெற்றனர். மெக்கானிக்கல் பிரிவில் 7,200 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இன்று
மாலையுடன் கவுன்சிலிங் முடிவடைகிறது.
எலக்ட்ரிகல் பிரிவுக்கு 7,700 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கவுன்சிலிங் நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கல்லுாரிகளிலிருந்து, இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், எலக்ட்ரிகல் பிரிவுக்கு அதிகபட்சமாக 66 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...