விருதுநகர்
மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளை வழிநடத்துவது குறித்து
தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடத்த பள்ளி கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இக்கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (22-ம் தேதி) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில்
பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தக் கூடாது.
அதேபோல், கைகளில் வண்ணக்கயிறுகள் கட்டுதல் மற்றும் ஜாதியை
அடையாளப்படுத்தும் பனியன் ஆகியவைகளை அணிதல், சுவர்களில் ஜாதி சார்ந்த
வாசகங்களை எழுதுவதை தவிர்க்கவும், பள்ளி வளாகத்தில் விரும்பத் தகாத
செயல்களிலும், பேருந்துகளை மறியல் செய்தல் காவல் துறை மூலம் நடவடிக்கை
எடுப்பது, பள்ளிகளில் பிரச்னை ஏற்பட்டால் உடனே மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல்
தெரிவித்தல், விளையாட்டில் மாணவ, மாணவிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த
முன்வருதல் தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட இருக்கிறது.
இதைத் தொடர்ந்து அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். அதில், பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட இருக்கிறது. அதனால், இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...