நீலகிரி மாவட்டம், ஊட்டி கடநாடு கிராமத்தை சேர்ந்தவர் போஜன், 85, அப்துல்
கலாமுடன், 1950-54ல், திருச்சி புனித ஜோசப் கல்லுாரியில் படித்தவர்.
கடந்த, 2010ல், அவர் கோவை வந்தபோது, எங்கள் கல்லுாரி நண்பர்
சத்தியமூர்த்தியிடம், 'மாணவ, மாணவியர் எல்லாரும், பிளஸ் 2, முடித்து
விடுகின்றனர். அதற்கு மேல் என்ன செய்வது என அவர்களுக்கு தெரிவதில்லை.
கல்லுாரி படிப்பை தொடர வசதியில்லாத, ஏழை பெண்களின் உயர் கல்விக்கு உதவ
வேண்டும்' என்றார்.அதன் விளைவாக, 'சேவ் அவர் டாட்டர்ஸ்' என்ற அமைப்பு
உருவாக்கப்பட்டு, பிளஸ் 2 முடித்த ஏழை மாணவியருக்கு, உயர் கல்விக்கான
உதவித் தொகை வழங்கப்படுகிறது. அந்த அமைப்புக்கு கலாம், ஒரு லட்சம் ரூபாய்
நன்கொடை வழங்கினார்.
அந்த அமைப்பின், நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்,
நீலகிரியில் உள்ள ஏழை மாணவியருக்கு, உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும்
நிகழ்ச்சியை, ஊட்டியில் நடத்த திட்டமிட்டிருந்தோம்; அதில் பங்கேற்க
சம்மதித்த கலாம், அதற்கான தேதியை விரைவில் வழங்குவதாக கூறியிருந்தார்.
அவரது மறைவால், அந்த வாய்ப்பை இழந்து விட்டோம்.இவ்வாறு, போஜன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...