தமிழகத்தில், 1,200 தொடக்கப் பள்ளிகள் மூடப்படவிருப்பதாக
வெளியாகியிருக்கும் செய்தி ஆதாரமற்றது என பள்ளிக்கல்வித்துறை
விளக்கமளித்துள்ளது. சென்னையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த பள்ளி
கல்வித்துறை செயலர் சபிதா இதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் இயங்கி வரும் எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம்
கிடையாது என அவர் கூறினார். 1,200 தொடக்க பள்ளிகளை மூடப்போவதாக வெளியான
செய்திகள் ஆதாரமற்றது என்றும் சபிதா மறுத்தார்.முன்னதாக ஆயிரத்து 200
தொடக்க பள்ளிகள் மூடப்பட இருப்பதாக ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்திருந்த
தகவலை பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டி இருந்தார்.
மேலும் பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...