ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து,
பல்கலை பணிகளை கவனிக்க, உயர்கல்வித்துறை முதன்மை செயலர் தலைமையில், மூன்று
பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பி.எட்., - எம்.எட்., - எம்.பில்.,
படிப்புகளை நடத்தும், 690 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், தமிழக ஆசிரியர்
கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.இந்த பல்கலையின்
துணைவேந்தராக இருந்த விஸ்வநாதன், 22ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இவர், 2012
முதல் துணைவேந்தராக பணியாற்றியவர். பி.எட்., படிப்பில், 10 புதிய
பாடப்பிரிவுகளைக் கொண்டு வந்தார்.
எம்.பில்., மற்றும் பி.எச்டி., ஆராய்ச்சிப் படிப்புகளையும்
அறிமுகப்படுத்தினார்.பி.எட்., படிப்பில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங்,
'ஆன்-லைன்' வருகைப்பதிவேடு, பல்கலை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்
போன்றபல திட்டங்களை அமல்படுத்தினார்.அவர் ஓய்வுபெற்ற நிலையில், பல்கலையின்
பணிகளை கவனிக்க, மூன்று பேர் அடங்கிய இடைக்காலக் கமிட்டியை அரசு
அமைத்துள்ளது. தமிழகஉயர் கல்வி முதன்மைச் செயலர் அபூர்வா, கல்லூரி கல்வி
இயக்குனர் தேவதாஸ் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை
சிண்டிகேட் உறுப்பினர் கோவிந்தன் ஆகியோர் கமிட்டி யில் இடம்
பெற்றுள்ளனர்.'இன்னும், மூன்று மாதங்களில், பல்கலைக்கு புதிய துணைவேந்தர்
தேர்வு செய்யப்படுவார்' என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...