புதுக்கோட்டை
காமாராஜபுரம் நகராட்சி உயா்நிலைப்பள்ளி மாணவரின் அறிவியல் படைப்பு மாவட்ட அளவில் முதல்பரிசு
பெற்று மாநில அளவிலான அறிவியல் புத்தாக்க விருது கண்காட்சிக்கு தோ்வு பெற்றது. புதுக்கோட்டை
மாவட்ட அளவில் 372 இளம் அறிவியல் புத்தாக்க விருதுக்குரிய காட்சி படைப்புகளில் கண்காட்சி
புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாநில அளவில் நடைபெறும்
அறிவியல் புத்தாக்க விருது கண்காட்சிக்கு 28 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன. அதில்
புதுக்கோட்டை காமராஜபுரம் நகராட்சி உயா்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் வினோத் என்பவரின்
படைப்பான மரத்தினை பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக ஓரிடத்தில் இருந்து அகற்றி வேறு இடத்தில்
நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இயந்திரம் என்ற படைப்பு மாநில அளவில் நடைபெறும்
கண்காட்சிக்கு செல்லும் 28 படைப்புகளில் முதல் பரிசு பெற்றது. இந்தப் படைப்புக்கான
பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திருமதி
செ. சாந்தி மாவட்டக்கல்வி அலுவலா்கள் (பொ)
புதுக்கோட்டை திரு பி. மாணிக்கம், அறந்தாங்கி திரு ஆா் சண்முகம், வழிகாட்டி ஆசிரியை
திருமதி ஆா்.சுமதி ஆகியோர் முன்னிலையில் மாணவன் வினோத்திடம் வழங்கி பாராட்டினார். முதல்
பரிசு பெற்ற மாணவன் வினோத்தினை காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்
திரு அயூப்கான்,பள்ளிபெற்றோர் ஆசிரியா்கழகத்தலைவா்மற்றும்கிராமக்கல்விக்குழுத்தலைவா்,
பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.
படவிளக்கம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திருமதி
செ.சாந்தி அவா்கள் முதல் பரிசு பெற்ற மாணவன் வினோத்திற்கு பரிசு மற்றும் சான்றிதழை
வழங்கியபோது எடுத்தபடம். அருகில் மாவட்டக்கல்வி அலுவலா்கள் (பொ) புதுக்கோட்டை திரு
பி. மாணிக்கம், அறந்தாங்கி திரு ஆா் சண்முகம் மற்றும் பலர் உள்ளனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...