தமிழகத்தில், 12 'ஸ்மார்ட் சிட்டி'களை உருவாக்க, மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. ஆனாலும், அது பற்றி தெளிவான வழிமுறைகள்
வெளியிடப்படாததால், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினர் குழப்பத்தில்
உள்ளனர். இது தொடர்பாக, தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரி கள் கூறியதாவது:
மத்திய
அரசு அறிவித்துள்ள, 'ஸ்மார்ட் சிட்டி' மற்றும் 'அம்ருட்' நகர் திட்டங்களை
வரவேற்கிறோம். எனினும், அது பற்றிய தெளிவான வழிமுறைகள் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் இருந்து டில்லி சென்ற அதிகாரிகளுக்கே, எந்தெந்த நகரங்கள், இறுதிப் பட்டியலில் இருந்தன என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையாவது, ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. அம்ருட்
திட்டம் பிடிபடவே இல்லை. தமிழக அதிகாரிகளிடமும், இதுபற்றிய விரிவான
தகவல்கள் இல்லை.
செப்டம்பரில் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்குள், மத்திய அரசு அவற்றை தெளிவு படுத்தினால், தமிழ
கத்தில் முதலீடு செய்ய விரும்பும் ஐ.டி., நிறுவனங்கள், தெளிவான முடிவு எடுக்க வழிவகுக்கும். நம்
நாட்டில், கேரள மாநிலம், கொச்சியில் மட்டுமே தற்போது, ஸ்மார்ட் சிட்டி
துவங்கப்பட்டுள்ளது. அதே பாணியில், ஸ்மார்ட் சிட்டிகளை அமைக்க, மத்திய,
மாநில, அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பசுமை கட்டடங்கள் இடம் பெற வேண்டும்:ஸ்மார்ட் சிட்டி எனப்படும் இடத்தில், அதிக மின்சாரப் பயன்பாடு தேவைப்படாத, பசுமை கட்டடங்களே இடம் பெற்றிருக்க வேண்டும்.ஐ.நா., தொழில் வளர்ச்சி அமைப்பு விதிகளின்படி, சூழலை பாதிக்காத, மின்னணு பொருள் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கரியமில வாயு வெளியேற்றம் மிகக்குறைவாக இருக்க வேண்டியது அவசியம்.
அருகில் நீர்நிலைகள் மற்றும் பசுமைச்சூழல் இருக்க வேண்டும். ஆனால்,
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில், இந்த அம்சங்களை நிறைவேற்ற,
அரசிடம் என்னென்ன திட்டங்கள் உள்ளன; அவற்றை செயல்படுத்துவதற்கான காலக்கெடு
போன்றவை பற்றி தெளிவான விளக்கம் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...