இனி உங்கள் குழந்தையிடம் அதிகம் படித்தால் நல்ல வேலையுடன், வசதியாக வாழலாம் என்பதுடன் மற்றவர்களை விட நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என்றும் சொல்லலாம் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.
அமெரிக்காவை சேர்ந்த நியூயார்க் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் மற்றும் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, அந்நாட்டை சேர்ந்த 10 லட்சம் பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் பள்ளியில் உயர்நிலை கல்வி கற்றவர்கள் மற்றும் கல்லூரி பட்டம் பெற்றவர்களுடன், பள்ளி கல்வியை கூட தாண்டாதவர்களின் வாழ்நாள் பற்றி விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
சேகரிக்கப்பட்ட
விபரங்களை ஆய்வு செய்தபோது பள்ளியில் உயர்நிலை கல்வியை முடித்தவர்களும்,
கல்லூரி பட்டம் பெற்றவர்களும் அதிக நாட்கள் வாழ்வது தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் உயர்ந்த சமூக வாழ்க்கை மற்றும் நல்ல வருமானம்,
அத்துடன் உளவியல் நலவாழ்வு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மேம்பட்ட
அறிவாற்றல் வளர்ச்சி ஆகியவைதான் என தெரியவந்துள்ளது.
இதற்கு நேர் மாறாக பள்ளி கல்வியைக்கூட தாண்டாதவர் குடி, புகை மற்றும் தவறான உணவுமுறை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு விரைவாக உயிரிழந்து விடுகிறார்கள். முறையான கல்வி கற்றிருந்தால் 2010-ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...