நாட்டை வல்லரசாக்க
வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்த அப்துல் கலாம், தனது இறப்புக்கு அரசு விடுமுறை
விட்டு விடக் கூடாது என்றும், கூடுதலாக ஒருநாள் வேலை செய்ய வேண்டுமென்றும்
கேட்டுக் கொண்டவர்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
இந்தியாவை பொறுத்த வரை மக்கள் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்புடன்
அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம். ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட
நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்வார். கோவையில் ஒரே நாளில் 8 க்கும் மேற்பட்ட விழாக்களில் கலந்து கொண்டவர் அவர். அப்படி ஒரு வேகம், சுறுசுறுப்பு அவரிடம் இருக்கும்.
நாடு முழுக்கவுள்ள பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளை சந்திப்பது மட்டும்தான்
அவரது ஒரே நோக்கம். அதன் மூலம் நாட்டை வல்லரசாக்கவுள்ள வலுவான இளைய
தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்பது அவரது கனவு. நாட்டுக்கு நல்ல
குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாவார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை
வளர்க்கும்விதத்தில் இருந்துதான் நல்ல சமுதாயம் நாட்டுக்கு கிடைக்கும்
என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
எல்லா வகையிலும் நாட்டின் முன்னேற்றம் மட்டும்தான் அவரது இலக்காக இருந்தது.
தான் இறந்தால் கூட, அந்த வகையில் நாட்டுக்கு ஒரு நாள் விடுமுறை
அளிக்கப்பட்டு விடக் கூடாது. அதனால் நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு
விடக் கூடாது என்பதில் கூட அவர் குறியாக இருந்தார்.
இதனால்தான் '' நான் இறந்து போய் விட்டால், அன்றைய தினம் விடுமுறை விட்டு
விடக் கூடாது. என் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால்,கூடுதலாக
ஒருநாள் வேலை பார்க்க வேண்டும்'' என்று சொன்னவர் அப்துல் கலாம்.
அப்படிப்பட்ட மாமேதையை இன்று இந்தியா இழந்து விட்டது.
அதேபோல் மாணவ- மாணவிகளிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போதுதான் அவரது
உயிர் பிரிந்திருக்கிறது என்றால் இறப்பு கூட அவரது கனவை புரிந்து
வைத்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.
அப்துல் கலாம் மறைந்தாலும் அக்னிசிறகுகள் அணையாது...!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...