Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தஞ்சை பெரிய கோவிலில் இலவச 'வை- - பை' வசதி

          தஞ்சைப் பெரிய கோவிலுக்கு, உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அவர்கள் பயனடையும் வகையில், தற்போது, 'வை-பை' வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கருவிகள் கடந்த வியாழக் கிழமை பொருத்தப்பட்டன.
 
          இதுதொடர்பாக, தஞ்சை பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் ராஜுகூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடியின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, தஞ்சைப் பெரிய கோவிலுக்கு, இலவச வை--பை வசதி செய்து தரப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்துடன் இணைந்து, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.கோவிலுக்குள் எந்த இடத்திலும், இந்த வை-பை வசதியை இலவசமாகப் பெறலாம். இதை, லேப்டாப் அல்லது மொபைல் போன்களிலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.மொபைல் எண் மூலம், பி.எஸ்.என்.எல்.,லில் கணக்கைத் துவக்கிக் கொண்டு, நாள் ஒன்றுக்கு முதல் ௩௦ நிமிடம் இலவசமாக வை-பை வசதியைப் பெற்றிடலாம். இலவச சேவையைமாதத்திற்கு மூன்று முறை மட்டுமே, பயன்படுத்த முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive