சென்னை எழும்பூரில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் அதி நவீன அறிவியல் ஆய்வகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. தொன்
போஸ்கோ நிறுவனங்களின், நிறுவனரான புனித தொன் போஸ்கோவின் இருநூறாவது ஆண்டு
(1815-2015) பிறந்த நாள் விழா, உலகெங்கும் உள்ள தொன் போஸ்கோ கல்வி
நிறுவனங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்
ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் உள்ள தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி
வளாகத்தில் 12,000 சதுர அடி பரப்பளவில், ரூ 5 கோடி மதிப்பில் நவீன அறிவியல்
ஆய்வகம் தொடங்கப்பட்டது. இந்த விழாவில் நல்லி குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் உள்ளிடோர் அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைத்து பேசினர்.
மேலும், இந்தப் பள்ளியில் பயின்ற 25-க்கும் மேற்பட்ட சிறப்பு அறுவைச் சிகிச்சை மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில், தொன் போஸ்கோ பள்ளி தாளாளர் ஜான் அலெக்சாண்டர், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஜெஃப்ரான், லைஃப்லைன் மருத்துவமனை குழுமத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...