மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டு ஆய்வில் குழு
ஆய்வு முறையை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர் கழக மாநிலத் தனியார் பள்ளிச் செயலர் பி.சுப்பிரமணியன்
வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் புனித அருளானந்தர்
மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு ஆய்வு இந்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளிகளின்
தலைமையாசிரியர்களைக் கொண்டு முதுநிலை ஆசிரியர்களின் கற்றல்- கற்பித்தல் பணி
குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது
.கல்வி,
அறிவியல் தொழில் நுட்பத் துறையின் சார்பில் 1996-இல் வெளியிடப்பட்ட
அரசாணையின் படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளை 1996-97
ஆம் கல்வியாண்டு முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் உதவியுடன்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மட்டுமே ஆண்டாய்வை மேற்கொள்ள வேண்டும்
என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஓரியூரில் அரசின்
விதிமுறைகளுக்கு மாறாக குழு ஆய்வு முறையை மேற்கொண்டு முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்களை மோசமாக நடத்தியதை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்
கண்டிக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குழு ஆய்வு
முறையை தொடர்ந்து மேற்கொண்டால் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்
என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...