பள்ளி மாணவர்கள் மத்தியில் போலீசாரைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த,
தமிழகத்தில் முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘உங்கள் காவலரை
அறிந்து கொள்ளுங்கள்’ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு போலீசாரின் செயல்பாடு
மற்றும் அடிப்படை சட்ட நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தும்விதமாக ‘நோ யுவர் போலீஸ் (உங்கள் காவலரை அறிந்து கொள்ளுங்கள்)’
என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக அரசு
மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பிளஸ் 1 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
மாணவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று, காவல்துறையின் செயல்பாடு
குறித்து விளக்கப்படும். மாணவர்களிடையே காவல்துறை பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்த, மாநிலத்தில் முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் இந்த
திட்டத்திற்கான துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் நந்தகுமார் திட்டத்தை
துவக்கி வைத்தார். ராமநாதபுரம் எஸ்பி மயில்வாகனன் பேசுகையில், ‘‘இமாச்சல
பிரதேசத்தில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. மாதம் 2 ஆயிரம் மாணவர்கள்
வீதம் 6 மாதத்தில் 15 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...