நாடு முழுவதும், பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை வாங்கவும், விற்கவும் தடை
விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை
அமைச்சக மூத்த அதிகாரி, டில்லியில் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:
குடியரசு மற்றும் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்கு பின், தேசியக்
கொடிகள், சாலையோரங்களிலும், குப்பை தொட்டி களிலும் சிதறிக் கிடப்பதாக
எண்ணற்ற புகார்கள் வந்தன.
இதனால், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட தேசியக்
கொடிகளுக்கு தடை விதிப்பதற்கான உத்தரவை, மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில்
பிறப்பிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, மூத்த அதிகாரி கூறினார்.
கடந்த மார்ச்சில், பிளாஸ்டிக் தேசிய கொடிகளை வாங்கவும், விற்கவும் தடை
விதிப்பது குறித்த விரிவான கொள்கை திட்டத்தை உருவாக்குமாறு, மகாராஷ்டிரா
மாநில அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, 'பிளாஸ்டிக்
தேசியக் கொடிகளுக்கு தடை விதிக்கும் திட்டம் நிலுவையில் உள்ளது' என,
மத்திய அரசு தரப்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...