பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஹுவாவே தொழில்நுட்ப நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பம் வாயிலாக, வருங்காலத்தில் பிராட்பேண்ட் வேகமானது ஒரு நொடிக்குஒரு டெராபிட்(Terabits) எனும் அளவுக்கு அதிகரிக்கப்படும், இந்த வேகத்தில் இண்டர்நெட்டை உபயோகிக்கும் போது ஒரே சமயத்தில் பல கோப்புகளை (Files) பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நாம் உபயோகிக்கும் பிராட்பேண்ட் வேகத்தில், ஒரு HD திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய ஒரு மணி நேரம் கூட ஆகலாம். மேலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தால் தற்போதய வலையமைப்புகளில் எந்தவித மாறுதல்களும் செய்ய தேவை ஏற்படாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...