Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளுக்கான ஓவியம், தையல் பாடம் ஓராண்டாக தேடிய 'சிலபஸ்' கிடைச்சாச்சு!

ஓராண்டாக தேடப்பட்டு வந்த, அரசுப் பள்ளிகளுக்கான ஓவியம் மற்றும் தையல்

பாடத்திட்டம் (சிலபஸ்), விருதுநகர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், கலை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.அரசுப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட கலை ஆசிரியர்கள் நிரந்தரமாகவும்; 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தொகுப்பூதியத்திலும் பணியாற்றி வருகின்றனர். சிறப்பு பயிற்சி ஒவ்வொருவருக்கும் ஓவியம், தையல், இசை, கைவினை, தோட்டக்கலை என, பல கலைப்பிரிவுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர்கள் பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது.

அதேநேரத்தில், மாணவர்களுக்கான கலைப்பிரிவு பாடத்திட்டம், கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு அதுதொடர்பாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பாடத்திட்டத்தை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. ஓர் ஆண்டாக பாடத்திட்டத்தை தேடி, கல்வித்துறை அலுவலகங்களுக்கு ஆசிரியர்கள் அலைந்து திரிந்தனர்.பெயரளவில்...கல்வித்துறையின் அனைத்து அலுவலகங்களில் தேடியும், பாடத்திட்டம் கிடைக்காததால், பெயரளவில் பாடம் நடத்தி வந்தனர். இந்நிலையில், காணாமல் போன, 'சிலபஸ்', ஓர் ஆண்டுக்குப் பின், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

இந்த, சிலபஸ் நகலை, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் பெற்றுச் சென்றுள்ளனர். இதனால், கலை ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு வழியாக பாடத்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. தற்போது அதை நகல் எடுத்து, அனைத்து பள்ளிகளின் கலை ஆசிரியர்களுக்கும், தாமதமின்றி அனுப்பினால், மாணவர்களுக்கு பாடத்திட்டப்படி கற்றுத்தர உதவியாக இருக்கும்.




1 Comments:

  1. Sir i am a drawing master kindly send drawing syllabus for school from 1 std to 10 std. I'll download and share with my friends.please publish drawing syllabus

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive