சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதியோர் மாற்றுத் திறனாளிகள்
ஆதரவற்ற விதவைகள் ஆதரவற்ற வேளாண் தொழிலாளர்கள் ஆதரவற்ற விவசாயிகள் கணவனால்
கைவிடப்பட்ட பெண்கள் 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழை பெண்களுக்கு
மாதாந்திர உதவித்தொகை வருவாய்த் துறை மூலம் வழங்கப்படுகிறது.
வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில்
விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காதவர்கள் திடீரென உதவித்தொகை
நிறுத்தப்பட்டவர்கள் அதுகுறித்த சந்தேகங்கள் மற்றும் குறைகள் குறித்து
புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை எழிலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தலைமை அலுவலகத்தில் 1800
4251090 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.சமூக
பாதுகாப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில் 'சென்னை உட்பட 32
மாவட்டங்களில் பயனாளிகளை அலைய விடுவோர் மற்றும் தகுதியிருந்தும் ஓய்வூதிய
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதுபற்றி உடனடியாக கட்டணமில்லாத
தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். அவர்களின்
புகார்கள் நிவர்த்தி செய்யப்படும்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...