Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'பிளே ஸ்கூல்' விதிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

         தமிழக அரசின், 'பிளே ஸ்கூல்' வரைவு விதிகளுக்கு, சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். இதனால், குழந்தைகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும் என்றும் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

           தமிழகத்தில், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளிகள், புற்றீசல் போலப் பெருகி வருகின்றன. இவற்றை முறையான பள்ளிகளாக அங்கீகரிக்க, வரைவு விதிகளைத் தமிழக அரசு அறிவித்தது. இது குறித்த கருத்துக்களை அனுப்பும் காலக்கெடு ஜூன், 22ம் தேதியுடன் முடிந்தது; 50க்கும் குறைவானவர்களே கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:
ஒன்றரை வயது குழந்தைக்குப் பள்ளி என்பதும், அதைத் தொடக்கக் கல்வித் துறை நிர்வகிப்பதும் முரண்பாடாக உள்ளது. பள்ளிக்கும், காப்பகத்துக்கும் வித்தியாசம் உள்ளது. காப்பகத்தைப் பள்ளியாக மாற்றுவது, பொறுப்பில்லாத செயல். படுத்தே இருக்கும் பச்சிளம் குழந்தைகளை, எப்படி வாகனத்தில் தனியாக அழைத்து வர முடியும்.
பால் தவிர வேறு உணவுப் பொருட்களை அறியாத நிலையில், பள்ளிக்கூடம் அழைத்து வருவது ஆபத்தானது; எனவே, விதிகளை ரத்து செய்ய வேண்டும். மேலும், மழலையர் பள்ளிகள் தொடர்பாக, ஜூன், 22ம் தேதியுடன் முடிந்துள்ள, பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பதற்கான காலக்கெடுவை, இன்னும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இதேபோல, வேறு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். ஆனாலும், 'பிளே ஸ்கூல்' விதிகளை வரும், 30ம் தேதிக்குள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், இறுதி அறிக்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருவதாக, பள்ளிக் கல்வித் துறை
வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அரசின் வரைவு விதிகள் விவரம்
* மழலையர் பள்ளிகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி அங்கீகாரம் தருவார்.
* பள்ளி செயல்படும் இடம், சிமென்ட் கட்டடமாக இருக்க வேண்டும்.
* வகுப்பறை தரைத் தளத்தில் இருக்க வேண்டும்.
* ஜூலை, 31ம் தேதி, 1.5 வயது நிறைவடையும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம்.
* ஆசிரியர்கள் குறைந்தது, பிளஸ் 2 அல்லது டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி அல்லது பி.எட்., ஹோம் சயின்ஸ் படித்திருப்பது அவசியம்.
* குழந்தைகளைப் பள்ளி வாகனம் அல்லது வாடகை வாகனத்தில் அழைத்து வரலாம்; வாகனத்தில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும்.
* குழந்தைகளுக்குத் தண்டனை தரக்கூடாது; துன்புறுத்தக் கூடாது. ஆடல், பாடல் போன்றவை பாடங்களாக அல்லது பயிற்சியாக இருக்க வேண்டும். இந்த வரைவு விதிகளை, http://www.tn.gov.in/schooleducation/ என்ற இணைய இணைப்பில் அறியலாம்.

தன்னம்பிக்கை போய்விடும்!

ஒன்றரை வயது குழந்தைகளுக்கு ஒழுங்காக நடக்கவே தெரியாது; பெரும்பாலும் படுத்தும், தவழ்ந்தும் பொழுதைப் போக்கும். மூன்று வயது வரை அம்மாவின் பாசத்தை, அரவணைப்பையே அதிகம் தேடும். இந்தப் பச்சிளம் வயதில், பள்ளி மற்றும் காப்பகத்தில் விட்டால்,
அந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் தன்னம்பிக்கை இழக்கும்; ஒரு வித அச்சத்துடனே செயல்படும். பள்ளியில் விட்டால், அங்கு ஏதாவது ஆபத்து என்றாலோ, மற்ற குழந்தைகள் அடித்து விட்டாலோ சொல்லத் தெரியாது. மலம், சிறுநீர் அடிக்கடி கழிக்கும் நிலையில், பள்ளி அல்லது காப்பகத்தில் அதை உடனுக்குடன் சுத்தம் செய்ய முடியாது. இதனால், நோய்த் தொற்று ஏற்படும்.
டாக்டர் ஏ. பிரதாப் மனோ தத்துவ நிபுணர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive