ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவற்ற முறையில் முறையாக நடத்த வேண்டும் என
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
வலியுறுத்தியது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
மாநில பொதுக்குழுக் கூட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் பக்தவச்சலம் தலைமையில்
நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிறுவனர் அ.மாயவன், பொதுச் செயலாளர்
டி.கோவிந்தன், பொருளாளர் சொர்ணலதா,
துணைத் தலைவர் சென்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை
நிறுத்தத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்
கழகம் பங்கேற்பது. வரும் ஆகஸ்டு 1-ஆம் தேதி ஜாக்டோ சார்பில் 15 அம்சக்
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் ஒரு நாள் கோரிக்கை முழக்க
ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்பது.
ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவுமறைவற்ற முறையில் முறையாக நடத்த வேண்டும்.
காலி பணியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெளிப்படையாகத்
தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
கலந்தாய்வு நோ்மையாக நடக்காததற்கு ஒரு சில ஆசிாியா்களே காரணம். ஒரு சில ஆசிாியா்கள் பணம் கொடுப்பதால் தான் அனைத்து ஆசிாியா்களும் பாதிக்கப்படுகின்றனா். அவ்வாறு பணம் கொடுத்து வேலைக்கு போக நினைப்பவா்களும் வேலை கிடைத்த பின் பணம் கொடுத்து தனக்கு தேவையான இடதிற்கு மாறுதல் வாங்குபவா்களும் ஆசிாியா் தொழிலுக்கு வருவதை காட்டிலும் வி....ம் செய்யலாம் வீட்டில் இருந்தே நிறைய சம்பாதிக்கலாம்.
ReplyDeleteஇப்படிக்கு
பணம் இல்லா பட்டதாாிகள் சங்கம்.