“ஐ.ஏ.எஸ்., தேர்வை பொறுத்தவரை, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எளிதில்
வெற்றி பெறலாம்” என, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ள, ஐ.பி.எஸ்.,
அதிகாரி ராஜா கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி நடந்த ஐ.ஏ.எஸ்., தேர்வு முடிவில், 16
ஆயிரத்து 286 பேர் வெற்றி பெற்றனர். முதன்மை தேர்வில், 3 ஆயிரத்து 303 பேர்
வெற்றி பெற்று நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றனர். கடந்த வாரம்
வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 1,236 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதில்,
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த
பிச்சைக்காரன் மகன் ராஜா, 32; 82வது ரேங்க் பெற்றுள்ளார்.எம்.பி.பி.எஸ்.,
படித்த இவர், கடந்த 2009ல், தேர்வு எழுதி வெற்றி பெற்று, 2011ம் ஆண்டில்
கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக உள்ளார். தற்போது, ஐ.ஏ.எஸ்.,
தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜா, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
எனது கிராமத்தில் படிப்பதற்கான எந்த வசதியும் இல்லை. படிப்பில் கவனம்
செலுத்தி, கடின உழைப்புடன், விடாமுயற்சியுடன் படித்தேன். கடந்த 2010ல்
ஐ.பி.எஸ்.,ஆக தேர்வு பெற்றேன். ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற வேண்டும்
என்பது என் லட்சியம். இதற்காக, பணியில் இருந்து கொண்டே படித்து தேர்வு
எழுதி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. யு.பி.எஸ்.சி., தேர்வு
எழுதுபவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம். கல்வி
அறிவுடன், பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, ராஜா
கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...