தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்க புதிய தேர்வுக் குழு
அமைக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கீட்டுக்கான நூல்கள் விரைவில்
கொள்முதல் செய்யப்பட உள்ளது.தமிழகத்தில் 32 மாவட்ட நூல கங்கள் உட்பட 4,024
நூலகங்கள் உள்ளன.
இவற்றுக்கு மாவட்ட நூலக ஆணைக்குழு நிதி மற்றும் ராஜா ராம்மோகன் ராய் நூலகஅறக் கட்டளை நிதியின்கீழ் நூல்கள் வாங்கப்படுகின்றன. நூலகங்க
ளுக்கு வாங்குவதற்கான நூல் களை தேர்வு செய்ய பொது நூலகத் துறை இயக்குநரை
தலைவராகக் கொண்டு 16 பேர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது. இக்குழு
பதிப்பாளர் மற்றும் விற்பனை யாளர்களிடம் இருந்து பெறும் மாதிரி நூல்களை
ஆய்வு செய்து பரிந்துரைக்கும். கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அமைக்
கப்பட்ட தேர்வுக் குழுவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு மார்ச் 1-ம்
தேதியுடன் முடிந்தது. அதன்பிறகு ஓராண்டாகியும் புதிய குழு அமைக்கப்படாமல்
இருந்தது. இதனால், கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப் பட்டும் நூலகங்களுக்கான
நூல்கள் தேர்வு செய்யப்படவில்லை.புதிய குழுவை நியமிப்பது குறித்து அரசுக்கு
பொது நூலகத் துறை இயக்குநர் கடிதம் எழுதியிருந் தார். இந்நிலையில் புதிய
உறுப்பினர் களைக் கொண்ட குழுவை அமைத்து பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதா
நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, பொது நூலகத்துறை இயக்குநராக தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் செயல்படுவார். இக்குழுவின் உறுப் பினர் செயலராக நூலகத்துறை துணை இயக்குநரும், உறுப்பினர் களாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன், சென்னை வைஷ்ணவா கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர்பி.பொன்னுச்சாமி, ஓய்வுபெற்ற கூடுதல் செயலர் துரைபாண்டியன், சர் தியாகராயர் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் நா.வீரப்பன் உள்ளிட்ட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்தக் குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். இந்த குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூலக ஆணைக்குழுவின் நிதி நிலைக்கு ஏற்ப வாங்க பொது நூலக இயக்குநர் உத்தரவிடுவார் என குழுவுக்கான நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளது. புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதால், நூலகங்களுக்கான கடந்த ஆண்டு பதிப்பு நூல்கள் விரைவில் வாங்கப் படும். இருப்பினும், நூல் பரிசீலனை கட்டணம், பதிவுக் கட்டணம் குறித்த தகவல் ஏதும் நிபந்தனையில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து நூலகத்துறை அதிகாரிகள் கூறிய தாவது:
நூல் தேர்வுக் குழுவினர் ஒரு நூலை பரிசீலிக்க ரூ.40 வழங்கப் படுகிறது. அதே போல பதிப்பகத் தாரிடம் இருந்து அவர்கள் அளிக்கும் நூலுக்கு ரூ.100 பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பரிசீலனை தொகையை ரூ.40-லிருந்து 100 ஆகவும், பதிவுக் கட்டணத்தை ரூ.200 ஆகவும் உயர்த்த 2013 பிப்ரவரியில் நடந்த தேர்வுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.ஆனால், இதுவரை பள்ளிக் கல்வித்துறை முடிவு எதையும் அறிவிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...