பயிற்சி மருத்துவர்களுக்கு, 24 மணி நேர பணிமுறை தராமல், ஷிப்டு முறையை அமல்படுத்த வேண்டும் என, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், பயிற்சி மருத்துவர், முதுநிலை மருத்துவ மாணவர் என, 7,000 பேர் உள்ளனர். இவர்களின் வேலை நேரம் தொடர்பாக, முறையான விதிமுறைகள் இல்லாமல் இருந்தது.இதனால், இவர்கள், 24 மணி நேரம், 48 மணி நேரம் வேலை செய்யும் நிலை இருந்தது.
உடல் சோர்வு, மன சோர்வு ஏற்படுவதால், ஷிப்டு முறை கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.அதனால், பயிற்சி மருத்துவர் பணி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பயிற்சி மருத்துவர், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான வேலை நேரத்தை, ஷிப்டு முறைக்கு மாற்றி, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, அரசு மருத்துவக் கல்லுாரிகள், சார்புடைய மருத்துவமனைகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
எங்களின் நீண்ட கால கோரிக்கையை, அரசு ஏற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 24 மணி நேரம், 48 மணி நேர வேலை இல்லை என்பதால், மனச்சோர்வு, உடல் சோர்வு இன்றி நிம்மதியாக, இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும்.இதை, உத்தரவோடு நிறுத்தாமல், விரைவில் செயல்படுத்த வேண்டும். டாக்டர் பிரசாந்த்துணைத் தலைவர், தமிழ்நாடு பயிற்சி டாக்டர் சங்கம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...