நாடு முழுவதும் 4,754 ஐ.பி.எஸ். பணியிடங்கள் உள்ளன. இதில் 3,848 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் 906 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் அதிக அளவாக உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 517 ஐ.பி.எஸ். பணி இடங்களில் 129 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேற்குவங்காளத்தில் 98 இடங்களும், ஒடிசாவில் 79 இடங்களும், மராட்டியத்தில் 62 இடங்களும், கர்நாடகத்தில் 59 இடங்களும், யூனியன் பிரதேசங்களில் 53 பணியிடங்களும் காலியாக உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...